என் மலர்

  நீங்கள் தேடியது "nellai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தார்.
  • 6 மணிக்கு பரதநாட்டியம், 8 மணிக்கு பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  நெல்லை:

  பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

  உள்ளூர் விடுமுறை

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்தாண்டு தேரோட்டத்தை வெகு விமர்சையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  தேரோட்ட பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது.

  திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பக்தி சொற்பொழிவு, சுமார் 5 மணிக்கு பக்தி இன்னிசை, 6 மணிக்கு பரதநாட்டியம், 8 மணிக்கு பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  இதற்கிடையே தேரோட்டத்திற்காக நெல்லையப்பர் தேர் (பெரிய தேர்), காந்திமதி தேர் உள்ளிட்ட அனைத்து தேர்களிலும் கம்புகள் மற்றும் குதிரை பொம்மைகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகன சோதனையில் சிக்கியவர்கள் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
  • பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

  நெல்லை:

  பாளை வண்ணார் பேட்டை பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  சிறுவர்கள் சிக்கினர்

  அப்போது தெற்கு புறவழிச்சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 சிறுவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிமறித்த போது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

  அவர்களை 2 போலீசார் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.அதில் இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

  திருட்டு மோட்டார் சைக்கிள்

  உடனே அவர்களை போலீசார் காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேரன்மகாதேவியிலிருந்து மோட்டார் சைக்கிளை திருடிச் கொண்டு நெல்லைக்கு வந்ததாக தெரிவித்தனர்.

  கொள்ளையடிக்க திட்டம்

  டவுன் நயினார் குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

  இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 2 அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
  • மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்வதாக அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

  நெல்லை:

  தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 57). இவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

  கொலை

  கடந்த 26-ம் தேதி கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்ற மாயாண்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கடந்த 1-ம் தேதி அவர் தாழையூத்து சிதம்பரம் நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  இது தொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி அவருடன் பணிபுரிந்த மாரிமதன் (25) என்பவரை கைது செய்தனர். மாயாண்டியிடம் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்ததாக மாரிமதன் வாக்குமூலம் அளித்தார்.

  3-வது நாளாக போராட்டம்

  இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினர் ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் இன்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாயாண்டியின் மனைவி புஷ்பம் தனது 2 மகள்கள் மற்றும் கரையிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மனு அளிக்க வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

  கலெக்டர் பேச்சுவார்த்தை

  கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் வேண்டும் என கேட்டிருந்தனர். அது குறித்து உடனடியாக பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

  அவர்களுக்கு ஆதரவாக மாநில இளைஞரணி தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

  அவர்களுடன் நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வதாக அவர் உறுதியளித்தார்.

  மேலும் மாயாண்டியின் 2 மகள்களும் நன்றாக படித்துள்ளனர் என்பதால் அவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

  இதனையடுத்து மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்வதாக அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாடகசாலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
  • பணியாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக புகார்

  நெல்லை:

  நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

  பாளை யூனியன் திருவேங்கடநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.

  திருவேங்கடநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடகசாலை கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறோம்.

  எங்கள் பகுதியில் இருந்து காலையில் 7.30 மணிக்கு வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு செல்வதற்குள் தாமதமாகி விடுகிறது. அப்போது பணியாளர்களுக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

  எனவே எங்கள் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் எங்களுக்கு வேலை செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • கோவிலில் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வருகின்றனர்.

  நெல்லை:

  நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முக்கிய திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

  500 பேருக்கு அன்னதானம்

  கடந்த 2002-ம் ஆண்டு முதல் நெல்லையப்பர் கோவிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

  சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

  அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 20 கோவில்களில் இந்த அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வருகின்றனர்.

  இன்று நடந்த அன்னதான திட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58).
  • கொலை தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

  நெல்லை:

  நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

  சாலை மறியல்

  இவர் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்–டில் இருந்து வெளியே சென்றார், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

  ஆனால் போலீசார் அவரை கண்டுபிடிக்காததை கண்டித்து நேற்று முன்தினம் காலை மாயாண்டியின் உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தாழையூத்து அருகே சிதம்பரநகர் காட்டு பகுதியில் மாயாண்டி கல்–லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

  தாழை–யூத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவரது உடல் கிடந்ததால் தாழையூத்து போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசா–ரணை நடத்தி அவருடன் வேலை பார்த்து வந்த மாரி மதன் (21) என்பவரை கைது செய்தனர்.

  3-வது நாள் போராட்டம்

  இந்த சம்பவத்தில் போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்து நேற்று முன்தினம் மாயாண்டி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். நேற்று 2-வது நாளாக கரையிருப்பு கிராமத்தில் பந்தல் அமைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மாயாண்டி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

  இந்நிலையில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை, பாளை வட்டத்தில் உள்ள 17 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
  • தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,079 பேர் தேர்வு எழுத வரவில்லை.

  நெல்லை:

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

  17 மையங்கள்

  நெல்லை, பாளை வட்டத்தில் உள்ள 17 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுதுவதற்காக 4,831 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தேர்வையொட்டி மையங் களில் கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக் கைகள் செய்யப்பட்டி ருந்தது.

  இன்று காலை தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

  57 சதவீதம் பேர் எழுதினர்

  இந்த தேர்வினை 2,752 பேர் மட்டுமே எழுதினார்கள். இது 57 சதவீதம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,079 பேர் தேர்வு எழுத வரவில்லை.

  தேர்வை கண்காணிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 5 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு மையங் களை கண்காணித்தனர்.

  மேலும் தேர்வு மைய நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.
  • பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார்.

  ஏர்வாடி:

  கிராமம் முழு சுகாதாரமாக இருத்தல் வேண்டும் என்பதனை வலியுறுத்தி தளவாய்புரம் பஞ்சாயத்தில் பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வீட்டிற்கு வீடு நவீன கழிவறை அமைத்தல், தெருக்களை சுத்தமாக பேணி பாதுகாத்தல், சாக்கடைகளை தூர் வாருதல், அனைத்து இருப்பிட பகுதிகளையும் தூய்மை படுத்துதல் போன்ற நிலைகளை வலியுறுத்தி எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.

  பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின், சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

  நேற்று 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 70 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஆகியோர் இதில் அடங்குவர்.

  இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  அரசின் உத்தரவுப்படி பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அபராதம் விதிக்கும் நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  இதற்கிடையே அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

  அதன்படி இன்று நெல்லை மாவட்ட பள்ளிகளில் மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்து சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது.
  • விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது

  நெல்லை:

  நெல்லையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். தகுதியும் திறமையும் உள்ள அனைவரும் நல்ல2 நிலையை அடைய முடியும்.

  கல்விக்கு தமிழகம் தான் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் தான் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  தற்போது தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சற்று அதிகரித்துள்ளது. எனினும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் இதுவரை கல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கல்குவாரியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாதது.

  விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் குவாரிகள் திறக்கப்படும்.

  3 சதவீதம் வரையிலான குவாரிகள் சட்டவிரோதமானவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து குவாரிகளையும் மூட வேண்டும் என்பது அரசினுடைய நோக்கம் அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது.
  • நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

  நெல்லை:

  தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி அதிக அளவில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

  குறிப்பாக நெல்லை, தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருவதால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர்.

  நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

  இந்த பேரிகார்டுகள் காற்றின் வேகம் காரணமாக அடிக்கடி சாலையில் சாய்ந்து விழுந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin