என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"
- அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை , மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் (நடைமேடை எண்-7), அரியலூர் , ஜெயங்கொண்டம் (நடைமேடை எண்-8) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் (நடைமேடை எண்-5) ஆகிய ஊர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 450 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் 10-ந்தேதி 450 கூடுதல் பஸ்களும், 11-ந்தேதி 100 கூடுதல் பஸ்கள், 12-ந்தேதி 750 கூடுதல் பஸ்கள், 13-ந்தேதி 850 கூடுதல் பஸ்கள், 14-ந்தேதி 800 கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.
மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) 250 கூடுதல் பஸ்களும், 10-ந்தேதி 250 கூடுதல் பஸ்களும் 11-ந்தேதி 150 கூடுதல் பஸ்கள், 12-ந்தேதி 250 கூடுதல் பஸ்கள், 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் 575 கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுள்ளது.
- தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
- ரெயில்களில் எல்லாம் இடங்கள் நிரம்பிவிட்டதால் மேலும் 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடச் சொல்லும் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் தென் மாவட்ட பகுதி மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக அறிவிக்கப்பட்ட இந்த ரெயில்களில் எல்லாம் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.
ஒரு சில ரெயில்களில் ஏசி படுக்கைகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இதேபோல கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களும் நிரம்பி விட்டதால் கூடுதலாக 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரெயில்களில் 8 ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே 6 ரெயில்களும், சென்னை-தூத்துக்குடி இடையே 2 ரெயில்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல சென்னை சென்ட்ரல்-போத்தனூர் இடையே 2 சிறப்பு ரெயில்களும் அறிவிக்கட்டு இருக்கிறது.
கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 10 சிறப்பு ரெயில்களில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 8 ரெயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் 2 ரெயில்கள் பகல் நேரத்தில் அமர்ந்து செல்லக் கூடிய கூடியது. திருநெல்வேலி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 13 மற்றும் 20-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரெயில் அன்று பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 2 மணிக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயிலில் ஏசி சேர் கார், சாதாரணமாக உட்கார்ந்து செல்லக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி இதில் இல்லை. இதே போல 14-ந் தேதி திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே பகல் நேர சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-தாம்பரம் இடையே 12 மற்றும் 19-ந் தேதி பகல் நேர படுக்கை வசதி சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி இடையே 12 மற்றும் 19-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-சென்ட்ரல் இடையே 13 மற்றும் 20-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை வழியாக செல்கிறது.
இந்த 8 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஆன்லைன் வழியாகவும், ஏஜென்சி மூலமாகவும் டிக்கெட்டை பெறுவதில் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.
தெற்கு ரெயில்வே இந்த ஆண்டு தென் மாவட்டங்களுக்கு அதிக ரெயில்களை இயக்கி வருவது சிறப்பாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களில் எப்படியாவது பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஒரே நாளில் சேரும் வகையில் பகல் நேர ரெயில்கள் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடைகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஜனவரி 12,13,19 மற்றும் 20ம் தேதிகளில் நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து 12, 19ம் தேதிகளில் அதிகாலை 12.30க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல் 1.30க்கு தாம்பரம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 4.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 8 மணிக்கு நெல்லை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து 13, 20ம் தேத அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல 2 மணிக் தாம்பரம் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடைகிறது.
நெல்லையில் இருந்து 14ம் தேதி அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
- நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
- ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவும் இன்று காலை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06053), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 9, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06156), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 9,16 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06155), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06158), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* கோவையில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06034), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் சிறப்பு ரெயில் (06033), மறுநாள் காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06024), அதேநாள் காலை 10.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06023), அதேநாள் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), அதேநாள் இரவு 11.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06106), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயில் (06105), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
இவை உள்பட மொத்தம் 10 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
- அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.
அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.
சென்னை:
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு 'பை' மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டன.
அதே போல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. இவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்க உள்ளது. அது ரூ.3 ஆயிரமா? அல்லது ரூ.4 ஆயிரமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது மட்டுமின்றி பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதன்படி 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 2,22,91,700 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 1,77,22,000 வேட்டியும், 1,77,64,000 சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.
அதன் பிறகு பொதுமக்கள் எந்தெந்த தேதிகளில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த டோக்கனில் எழுதி கொடுப்பார்கள். அதன்படி சென்று ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பொங்கல் ரொக்கப் பணம் மற்றும் பரிசு தொகுப்பு விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை சீசனில் ரெயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்ததால் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.
- விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இப்போது முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளோம்.
சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது. இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம். சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இதில் இடம் பெறுகிறது.
ஆம்னி பஸ்களுக்கு இணையாக வாங்கப்பட்டு உள்ள வால்வோ பஸ் பொங்கலுக்கு பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது.
- விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுகு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்
அந்த வகையில், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது.
டெண்டர் இறுதியானதும் ஜூலை மாத இறுதியில் வேட்டி,சேலை உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படு கிறது.
- மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் சின்னசேலம் சங்கரா புரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்க ப்படு கிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்க லுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதி களில் மஞ்சள் கொத்து கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கல்யாணமான பெண்க ளுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக பொருள்களாக விளங்கு வது மஞ்சள், கரும்பு பானை, அரிசி, வெள்ளம் இப்பொருள்களை வைத்து பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொடுப்பார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது மஞ்சள்.
இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. சின்னசேலம் நயினார்பாளையம் கூகையூர் மூங்கில்பாடி, கல்லாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பொங்கல் பண்டிகையை யொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மஞ்சள் அறு வடைக்கு தயார் நிலை யில் உள்ளது. சென்ற ஆண்டை ப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடை க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
- பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.
- ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
குடிமங்கலம்:
அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடி விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினார்.
- திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை.
அனுப்பர்பாளையம்:
ஜனவரி மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், வேலம்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறைகளில் பொங்கல் பானை உற்பத்தி சூடு பிடித்துள்ளது. அரை கிலோ முதல் 10 கிலோ வரை அரிசி பொங்கலிடும் வகையில் பானை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரமான தகடு, துல்லிய வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் ஆர்டரை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளால் பலர் இங்கு ஆர்டர் கொடுக்க விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆர்டர் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ பித்தளை தகடு ரூ.270க்கும், கடந்த ஆண்டு ரூ.500 க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.600 முதல் 650 வரை விற்கிறது. தகடை வெட்டி பானையாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. விலை அதிகம் என்பதால் மக்கள் பானை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். முன்பு மக்கள் பழைய பானை இருந்தாலும் பொங்கலிட புது பானை வாங்குவர்.
தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை. பழைய பானையை பாலிஷ் செய்து பயன்படுத்துகின்றனர் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால் பெற்ற ஆர்டர்களுக்கு உரிய பானைகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






