search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol sale"

    • அழகுதுரை,முத்து துரைச்சி ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர்.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது நடுவக்குறிச்சியை சேர்ந்த அழகுதுரை(வயது 42), அவரது மனைவி முத்து துரைச்சி(37) ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே மது விற்பனையில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மது பாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். 

    இதில் தருமபுரியில் ஒருவரும், அரூரில் 2 பேரும் மற்றும் பென்னாகரதில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    புன்னம்சத்திரத்தில் அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஜன வெளியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மணிகண்டன் மது விற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    இண்டூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மதுவிற்ற 2 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அரசுக்கு புறம்பாக மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோன்று அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    குமரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 168 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    திருவட்டார்:

    மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி, ஆகிய சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளத்தை அடுத்த வசந்தம் நகர் பகுதியில் வரும்போது, அங்கு முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் அதே பகுதியை அந்தோணி (வயது 67) என்பதும் அந்த பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தக்கலை மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தக்கலை பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதாக சுந்தரபாய் (47) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அனந்தபத்மனாபபுரம் பகுதியில் வரும்போது அங்கு பாடலிங்கம் என்ற துரை (43) அனுமதி இன்றி மது விற்பதாக அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் அப்பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்றார். அப் போது அருமனை பஜாரில் அனுமதி இன்றி மது விற்றதாக மனோகரன் (58) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பூதப்பாண்டி, மார்த்தாண்டம், களியக்கா விளை, கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 168 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    குலசேகரம் பகுதியில் தனியார் மதுபான பார் உள்ளது. நேற்று காந்தி நினைவு தினத்தையொட்டி மது விற்க அரசு தடை விதித்திருந்த போதிலும் அங்கு விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் பாரின் அருகே மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளான தாக கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த நேரத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், காந்தி நினைவு தினத்தன்று மது விற்பனை செய்த பார் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டின் விற்பனையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். #Tasmac
    சென்னை:

    பொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இதன்காரணமாக பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு போகி பண்டிகை(14-ந்தேதி) அன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. அதேபோன்று பொங்கல் தினத்தன்று(15-ந்தேதி) 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி(நேற்று) மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகையின் போது கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    நெல்லை மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 667 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகள் மற்றும் பார்களை அடைக்க உத்தர விடப்பட்டிருந்தது. இதனால் அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. 

    நெல்லை மாவட்டத்திலும் அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதுக்கடை, பார் அருகே சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் நேற்று மது விற்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

    இவர்களிடம் இருந்து மொத்தம் 2100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை புறநகர் பகுதியில் தடையை மீறி மது விற்றதாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 567 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் மாவட்டம் முழுவதும் 57 பேர் கைது செய்யப்பட்டு 2667 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், மது மற்றும் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைசாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துபிள்ளை மனைவி ராஜம் (வயது 45), அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (31) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், வெளிப்பாளையம், தெற்கு நல்லியான்தோட்டம், செல்லூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 925 லிட்டர் சாராயமும், 481 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடியே 95 லட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்த விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.99¾ லட்சம் அதிகம் ஆகும்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2019-ம் புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் புத்தாண்டை கொண்டாட, மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்தனர். இதனால் கடைகளில் மாலை நேரத்தில் இருந்து கடை அடைக்கும் நேரம் வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மதுப்பிரியர்கள் தங்களது விருப்பமான மதுவகைகளை வாங்கி நண்பர்களுடன் அருந்தி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடிவிடுவார்கள் என்பதால் ஒரு சிலர் கூடுதலாக மதுவகைகளை வாங்கி நள்ளிரவு 12 மணிக்கு மது அருந்தினர்.

    இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    மாவட்டத்தில் 204 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பண்டிகை காலங்கள் மற்றும் திருமண நாட்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும். புத்தாண்டு பிறப்பு என்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் பிராந்தி வகை 9 ஆயிரத்து 204 பெட்டியும், பீர் வகை 6 ஆயிரத்து 401 பெட்டியும் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.5 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 420 ஆகும். மேலும் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, டாஸ்மாக் கடைகளில் ரூ.4 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 112-க்கு மதுவிற்பனை நடைபெற்றது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.99 லட்சத்து 84 ஆயிரத்து 308-க்கு மதுவிற்பனை நடைபெற்றது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சாத்தான்குளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் மற்றும் போலீசார் முதலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் பரமன்குறிச்சி அருகே உள்ள அத்திஅடிதட்டை சேர்ந்த தொழிலாளி ஆத்திமுத்து (வயது 65). என்பது தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

    இதையடுத்து ஆத்திமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    காரிமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் அனுமதியின்றி திருட்டு தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மதுவிற்றதன் பேரில் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் விசாரணை நடத்தியதில் லட்சுமி (வயது55) மாட்டிலாம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் லெனின் (42) சந்தை பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

    பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோன்று கடத்தூர் போலீசார் நடத்திய சோதனையில் ஜஷில்பாஷா (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு மற்றும் மதுபானம் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  மார்க்கெட் கமிட்டி பஸ்நிறுத்தம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார்   தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை  ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. 

    விசாரனையில் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜா(49) என்பது  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜா மீது வழக்குபதிந்து கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.  

    ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள காமராஜர்  சிலைக்கு அருகில்  உள்ள பாவுப்பட்டரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் மறைத்து வைத்து மது பாட்டில்கள்  விற்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் ஜெயங்கொண்டம் கீழக்குயிருப்பு  புதுத்தெருவை சேர்ந்த அன்பழகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அன்பழகனை கைது செய்து மதுபாட்டில் களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×