சுரண்டை அருகே மது விற்ற கணவன்-மனைவி கைது- 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

அழகுதுரை,முத்து துரைச்சி ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர்.
சுரண்டை அருகே மது விற்ற கணவன்-மனைவி கைது- 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

நெல்லை:

சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது நடுவக்குறிச்சியை சேர்ந்த அழகுதுரை(வயது 42), அவரது மனைவி முத்து துரைச்சி(37) ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே மது விற்பனையில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com