search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested worker"

    திருப்பூரில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற பனியன் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கவுண்டர் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அம்சவேணி (வயது 65).

    சம்பவத்தன்று மதியம் இவர் கடையில் இருந்தபோது சிகரெட் வாங்குவது போல் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் பதறிப்போன அவர் அம்சவேணி சத்தம் போட்டார்.

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த ஆசாமியை பிடித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் கண்டியன் குப்பத்தை சேர்ந்த கார்த்திக்(39) என்பதும், திருப்பூர் கருவம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

    சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து ஊழியர் வீட்டில் புகுந்த கட்டிட தொழிலாளி பீரோவில் இருந்த 11 பவுன் திருடிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே சென்னிகுளத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மனைவி ஞானவள்ளி. சிவஞானம் கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கும் சிவகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கருத்தப்பாண்டி (39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் கருத்தப்பாண்டி சென்னிகுளத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவள்ளி வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவின் லாக்கரை மர்ம நபர் உடைத்து உள்ளே இருந்த 11 பவுன் நகைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் வந்த நபர் யார் என்று தெரியவில்லை.

    இது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ஞானவள்ளி புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சித்ரகலா தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பவ இடத்திற்கு கருத்தப்பாண்டி வந்து சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் அருகே இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கருத்தப்பாண்டியை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞானவள்ளியின் வீட்டில் புகுந்து 11 பவுன் நகையை திருடியதை கருத்தப்பாண்டி ஒப்புக்கொண்டார்.

    மேலும் திருடிய நகையை விற்று செலவு செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கருத்தப்பாண்டி மேலும் இது மாதிரியான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் மற்றும் போலீசார் முதலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் பரமன்குறிச்சி அருகே உள்ள அத்திஅடிதட்டை சேர்ந்த தொழிலாளி ஆத்திமுத்து (வயது 65). என்பது தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

    இதையடுத்து ஆத்திமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    புதுவை ஆம்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க புதுவைக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வந்து இருந்தனர். அதேபோல் வாரவிடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதுவை ஆம்பூர்சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளை ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கிண்டல் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கடலூர் வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த மகிமைராஜ் (வயது42) என்பதும், வெல்டர் வேலை செய்து வரும் இவர் தீபாவளியையொட்டி புதுவையில் பொருட்கள் வாங்க வந்த போது குடிபோதையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகிமைராஜை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பிளஸ்- 2 மாணவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நாகர் கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோல் நேற்று பள்ளி முடிந்து மினி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. மாணவர் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். பஸ் சென்று கொண்டிருந்த போது அந்த மாணவரின் அருகே இருந்த அவர் மாணவரிடம் திடீரென செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் கூச்சலிட்டு அலறினார். பஸ்சை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த மாணவரிடம் விசாரித்தனர். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன்னிடம் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டதாக மாணவர் கூறினார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் அந்த மாணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராசா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் மாணவருக்கு  செக்ஸ் தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த பொன்மணி (வயது 47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    பணத் தகராறில் இளம்பெண்ணை தாக்கிய விசைத்தறி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 32). இவரது தாயார் தவமணி. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (39) என்பவர் தவமணியிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் கமலாவின் அத்தை அமலாவதியிடம் இருந்தும் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த பணத்தில் பெரியசாமி வீட்டில் விசைத்தறி கூடம் அமைத்தார். ஆனால் பணம் வாங்கி 6 வருடங்கள் ஆகியும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு சென்று கமலா வாங்கிய கடனை திருப்பி கொடு என பெரியசாமியிடம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி சரிமாரியாக கமலாவை அடித்து உதைத்ததுடன் இனிமேல் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    காயம் அடைந்த அவர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவ் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார். பின்னர் போலீசார் அவரை ஓமலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×