என் மலர்
நீங்கள் தேடியது "chain snatching"
- மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
- விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் மணியரசி (வயது 27), இவர் புலியூர்காட்டு சாகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணிபுரந்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புலியூர் காட்டு சாகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சிறு தொண்டைமாதேவி அருகே வந்து கொண்டிருந்தபோது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின்படி பெண் டாக்டரிடமிருந்து செயினை பறித்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். இவர் நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்த விக்கி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர். தாலி செயின் பறிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தி லேயே கொள்ளையனை கண்டறிந்த பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.
- கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. கடந்த 22.1.23 அன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஓட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப்பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்த போலீசார் மதுரையைச் சேர்ந்த கபாலி என்பவனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை பிடித்து வந்தனர். போலீசாரது விசாரணையில் அவன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அருண்குமார்(26) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.
- ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தை யாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து சாமி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது67). இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.
முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது மேற்கு பகுதி ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திடீரென்று முத்தமாளை பிடித்து கீழே தள்ளியுள்ளனர்.
இதில் அவர் கீழே விழுந்து வலியால் அலறி துடித்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு வாலி பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து முத்தம்மாள் சிப்காட் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
- 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.
வெள்ளகோவில் :
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பெருமாள்புதூா் பகுதியை சோ்ந்த முருகேசன் மனைவி ஜீவா (வயது 43). இவா் ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் இவா் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 24-ந்தேதி மாலை வீடு திரும்பி கொண்டிருந்தாா்.ஈரோடு முத்தூா் சாலை மு.வேலாயுதம்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2பேர் ஜீவா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஜீவா புகாா் அளித்தாா். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினா்.
இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சோ்ந்த ஆறுமுகம், கோவை செல்வபுரம் சாலை ஜோதிபுரம் பாரதி நகரை சோ்ந்த மாரீஸ்வரன் (27) ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாரீஸ்வரனை தேடி வந்தனா்.இந்நிலையில் அவரை வெள்ளக்கோவில் போலீசார் நேற்று கைது செய்தனா்.
- அமலோற்பவம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி அமலோற்பவம்(வயது 67).
இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அவர் ஆலயம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.
இதனை அறிந்த அவர் உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியில் திரிகடுகை முன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.
நகை மாயம்
கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வானியர் மேட்டு தெருவை சேர்ந்த செண்டு(வயது 57) என்ற மூதாட்டி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரது கழுத்தில் கிடந்த 65 கிராம் தங்கநகையை காணவில்லை. இதேபோல் கோவிலுக்கு வந்திருந்த முத்துலெட்சுமி என்பவரிடம் 40 கிராம் நகையும், சந்தானலெட்சுமி என்பவரிடம் 32 கிராம் நகையும் மாயமானது. கூட்ட ெநரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
- இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
தென்காசி:
சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் திரிகூடபதி விலக்கு பகுதி மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, கிருஷ்ணன், ஜோதிவேல் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த தொழிலாளி முப்புடாதிமுத்து (வயது28), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் குற்றாலம் அருேக உள்ள மெஞ்ஞான புரத்தில் கடந்த ஆண்டு இரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடமும், 2 பேரும் சேர்ந்து செயினை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
- தோழியின் வீட்டில் தூங்கிய போது சம்பவம்
- போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு பிள்ளையார் கோவில் எதிர்புறத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா(வயது 38). சத்தியபாமாவின் கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்தியபாமா தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தோழியான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரின் மனைவி சத்யா(31) என்பவர் எறையூரில் உள்ள தோழியை பார்ப்பதற்காக தனது மகனுடன் சத்தியபாமா வீட்டிற்கு வந்து கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளார். இரவு சத்யா வீட்டின் கதவு அருகே தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சத்யா கழுத்தில் கிடந்த ¾ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
- பாதிக்கப்பட்ட முதியவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 58 வயது முதியவர் ஒருவர் சித்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், முதியவரிடம் நான் உங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தேன். உங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள். உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
முதியவரும் அதனை நம்பினார். அதன்பின்னர் தொடர்ந்து 2 பேரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் ஒருநாள் முதியவரை போனில் தொடர்பு கொண்ட இளம்பெண், நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாம் இருவரும் சந்தித்து பேசி ஜாலியாக இருக்கலாம் என கூறினார். நாம் எப்போது சந்திக்கலாம் என கேட்டிருக்கிறார். முதியவரும் பெண்ணின் பேச்சில் மயங்கி அவரை நேரில் சந்திப்பதற்கு ஆசை தெரிவித்தார்.
அதற்கு அந்த பெண் நீங்கள் என்னை சந்திக்க வரும் போது டிப்டாப் உடையணிந்தும், நகைகளை அணிந்தும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். எதற்கு என்று முதியவர் கேட்க, நீங்கள் டிப்டாப் உடையில் நகை அணிந்தால் மிகவும் அருமையாக இருக்கும் என ஆசை வார்த்தையை அள்ளி வீசினார்.
முதியவரும் இளம்பெண்ணின் வார்த்தைகளை அப்படியே கேட்டு கொண்டவராக, டிப்டாப் உடையணிந்து கொண்டார். மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகையையும் எடுத்து அணிந்து கொண்டு இளம்பெண்ணை பார்க்க போகும் ஆவலில் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
போகும் வழியில் செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் துடியலூர் சந்திப்பில் நிற்பதாக கூறினார். அங்கு சென்றதும் இளம்பெண்ணை, முதியவர் சந்தித்தார்.
பின்னர் இளம்பெண், முதியவரை கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் இவர்களின் அருகே வந்தார். வந்த வேகத்தில் முதியவரை பார்த்து, நீ யார் எப்படி என் மனைவியுடன் பேசி கொண்டிருப்பாய் என கேட்டார்.
மேலும் முதியவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து இருக்குமாறு செல்போனில் புகைப்படமும் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
பணம் தராவிட்டால் இந்த புகைப்படத்தை உன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.
இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகையை பறித்த இளம்பெண் மற்றும் வாலிபரை தேடி வருகின்றனர்.
- மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் நகையை பறித்துச்சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா. சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (60). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.