என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒரு மணி நேரத்தில் அரங்கேறிய 8-க்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள்- விமான நிலையத்தில் கொள்ளையர்கள் கைது
    X

    ஒரு மணி நேரத்தில் அரங்கேறிய 8-க்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள்- விமான நிலையத்தில் கொள்ளையர்கள் கைது

    • காலை 6 மணி முதல் 7 மணி வரை நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
    • நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்தது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.

    கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×