என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையன்"

    • இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
    • மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    சீனிவாச ராவ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்வது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.

    வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த பிடரி கிராமத்தை சேர்ந்த திருடன் ஒருவன் சீனிவாச ராவின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் மற்ற பொருட்களை திருடிக் கொண்டு வெளியே செல்வார். திருடப்பட்ட பொருட்களை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவார்.

    பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான். இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    இதுகுறித்து சீனிவாச ராவின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சீனிவாச ராவ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்று மது குடித்துவிட்டு மீண்டும் அதே வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறுகிறார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    • தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
    • கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.

    அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.

    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சின்னையன் (வயது 42), புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் மீது புதுவை மாநிலத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேறி கோவைப்புதூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே வந்ததும் பழைய நினைவுகள் வந்து உண்டியலை உடைத்து பணம் திருட முடிவு செய்துள்ளார். உடனே இரும்பு கம்பியை கொண்டு கோவில் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்றபின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.8,250 பணத்தை திருடியிருக்கிறார். அப்போது மழை பெய்துள்ளது. இதனால் மழை நின்றதும் வெளியே செல்லலாம் என நினைத்து உண்டியல் அருகே படுத்துள்ளார். ஆனால் அங்கு அயர்ந்து தூங்கி விட்டதாக சின்னையன் தெரிவித்தார்.

    கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னையன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருடவந்த இடத்தில் கொள்ளையன் தூங்கியதால் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
    • திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவு என்கிற சிவராப்பன். பிரபல கொள்ளையன். இவர் சமீபத்தில் பைதரஹள்ளி போலீசாரால் கூட்டாளிகள் அனில் மற்றும் விவேக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். இந்த 3 பேரும் நகரில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    ஷிவு மீது மட்டும் குறைந்தது 11 வழக்குகள் உள்ளன. 3 பேரும் திருடிய சுமார் 260 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டனர். அதில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஷிவுவிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    அவர் போலீசாரிடம் கூறுகையில், தனது குற்றவியல் வாழ்க்கை முறையின் அவமானம் மற்றும் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இருப்பினும் எதையாவது செய்ய வேண்டும் என கருதி கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டேன்.

    அப்போது தனது பகுதியில் உள்ள குடும்பங்களின் அவலநிலையை கண்டு மனம் நெகிழ்ந்து, திருடப்பட்ட பணத்தை கல்வி கட்டணம் செலுத்தப் பயன்படுத்த முடிவு செய்தேன். பல மாணவர்கள் கட்டணம் செலுத்த சிரமப்படுவதை கண்டபோது, எனக்கு ஒரு புதிய நோக்கம் கிடைத்தது. சட்டத்தை மீறுவதாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன். பிரபல கொள்ளையன் 'ராபின் ஹூட் பாணியில்' தான் திருடிய நகை, பணத்தை கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 ஏழை மாணவர்களின் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தினேன். மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.

    திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன். மாணவர்களுக்கு நிதியுதவி செய்ததை தவிர, தனது 2 உதவியாளர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 ஆட்டோரிக்ஷாக்களை வாங்கியதாக கூறினார்.

    இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கல்விக்கு நிதியளிக்கவும், வாகனங்கள் வாங்கவும் ஷிவு பயன்படுத்தியதாக கூறப்படும் 14 லட்சம் ரூபாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட திருடர்களிடமிருந்து நாங்கள் எல்லா வகையான கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அசாதாரணமானது. அவர் உண்மையை சொல்கிறாரா? அல்லது அனுதாபத்தை பெற முயற்சிக்கிறாரா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலும், திருடர்கள் பிடிபட்டவுடன் உணர்ச்சிகரமான கதைகளை கொண்டு வருவார்கள். உண்மைகளை கண்டறிய நாங்கள் ஆழமாக ஆராய்வோம். அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு குற்றம் நடந்துள்ளது. அவரது கூற்றுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம் என்றார்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தானே:

    சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள இரானி பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

    சென்னையில் கொள்ளையன் ஜாபர் கொல்லப்பட்டதையடுத்து இரானி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இரானி கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க இரானி பகுதிக்கு போலீசார் செல்லும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
    • கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
    • மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த மாதம் நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஸ்பீக்கர் திருடப்பட்டிருந்தது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெசீம் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஜெசீம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 20 பவுன் நகை மீட்பு
    • இவருக்கு வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டார், வடசேரி போலீஸ் சரக்கத்துக்குட்பட்ட பகுதிகளிலும் வீட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த சரண் (வயது 23) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    சரணை போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வடசேரி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று 4½ பவுன் நகை மற்றும் ரூ.‌10 ஆயிரம் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் பார்வதிபுரம் பகுதியிலும் அவர் கைவரிசை காட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சரணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. இவருக்கு வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி தெருவில் சூப்பர்மார்க்கெட் உள்ளது .இங்கு வந்த டிப்டாப் சாமி ஒருவன்,தான் முதியோர்காப்பகம் நடத்துவதாக கூறி ஒரு பிட் நோட்டீசுடன் கடைக்குள் புகுந்தான். .அங்கிருந்த பெண் ஊழியரிடம்நைசாகபேசிபெண் ஊழியரின்செல்போனை அபேஸ்செய்துகொண்டுஅங்குஇருந்துவெளியே சென்றான்.

    பின்னர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ளமற்றொருகடையிலும் கைவரிசை காட்டி விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்துள்ளான்.

    இது குறித்து பண்ருட்டி போலீசர் விசாரித்து வருகிறார்கள். 

    காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கலைஞர் மு.கருணாநிதி புறவழி சாலையில், காரைக்கால் நகர போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் காரைக்காலில் அண்மையில் திருட்டு போன வாகனம் என்று தெரியவந்தது.

    தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது38) என்றும், இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனை அடுத்து போலீசார் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கடந்த அக்டோபர் மாதம் பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் அடையாளம் தெரிந்தது

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன்கோடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

    இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    தனிப் பிரிவு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நடத்திய இந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டவன் அடையாளம் தெரியவந்தது. அவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அடையாளம் காணப்ப ட்டவன் கேரள மாநிலம் பாற சாலை பகுதியைச் சேர்ந்த ஜினில் (வயது 28) என்பது உறுதியானதால் சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப் படை போலீசார் கேரளா விரைந்தனர். அவர்கள் பாறசாலையில் பதுங்கி இருந்த ஜினிலை கைது செய்தனர்.தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜினில், இருசக்கர வாகனத்தில் சென்று பல பெண்களிடம் நகை பறித்து இருப்பதும் அவன் மீது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் குற்றச் செயலில் ஜினிலுடன் ஈடுபட்டு வந்த அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்த லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தையும் திருடி சென்றனர்.

    இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் தனிப்படை போலீசார் கொள்ளையரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஆலயத்தின் வடக்கு ஜன்னல் வழியாக பர்தா அணிந்த ஒரு பெண் சர்ச்சுக்குள் புகும் காட்சி பதிவாகியிருந்தது.

    இந்தநிலையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் வெட்டுமடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்த சாபுமோன் (வயது 37) என்பதும், மோட்டார் சைக்கிளில் வந்த பெண் நூர்ஜகான் (43) என்பதும் தெரியவந்தது. தற்போது சாபுமோன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் சாபுமோன் வள்ளியூரில் 8 வருடங்களாக கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணையில் நூர்ஜகான் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பண்ணையருகே பிள்ளைகளுடன் தனி வீட்டில் வசித்தார். சாபுமோனுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர் மனைவியுடன் பண்ணையருகே வேறு தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நூர்ஜகான் - சாபுமோன் இடையே கடந்த சில வருடங்களாக தகாத உறவு உள்ளது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாபுமோன் கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் மற்றும் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது.

    இதுபோல் இரணியல் போலீஸ் சரகத்தில் 7 திருட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 16 சர்ச், வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து குளச்சல் போலீசார் சாபுமோன் மற்றும் நூர்ஜகான் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் சாபுமோன் கள்ளக்காதலியுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    • பூதப்பாண்டியில் கைவரிசை
    • போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே ஞாலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஞாலம் ஊராட்சியில் வரி வசூலிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதையடுத்து சுரேஷ் அக்கம்பக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளை தேடினார். எங்கு தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தப் பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் நாகர்கோவில் ரெயில்வே  ரோடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல் வடசேரியைச் சேர்ந்தவர் மைதீன் ராஜித் (வயது 48) இவர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தபோது மர்மநபர்கள் அதை திருடி சென்று விட்டனர்.இது குறித்தும் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது போன்ற காட்சி சிக்கியது. அதன் அடிப்படையில் போலீசார் பறக்கை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×