என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி கட்டணம்"

    • டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
    • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    • மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
    • திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவு என்கிற சிவராப்பன். பிரபல கொள்ளையன். இவர் சமீபத்தில் பைதரஹள்ளி போலீசாரால் கூட்டாளிகள் அனில் மற்றும் விவேக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். இந்த 3 பேரும் நகரில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    ஷிவு மீது மட்டும் குறைந்தது 11 வழக்குகள் உள்ளன. 3 பேரும் திருடிய சுமார் 260 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டனர். அதில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஷிவுவிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    அவர் போலீசாரிடம் கூறுகையில், தனது குற்றவியல் வாழ்க்கை முறையின் அவமானம் மற்றும் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இருப்பினும் எதையாவது செய்ய வேண்டும் என கருதி கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டேன்.

    அப்போது தனது பகுதியில் உள்ள குடும்பங்களின் அவலநிலையை கண்டு மனம் நெகிழ்ந்து, திருடப்பட்ட பணத்தை கல்வி கட்டணம் செலுத்தப் பயன்படுத்த முடிவு செய்தேன். பல மாணவர்கள் கட்டணம் செலுத்த சிரமப்படுவதை கண்டபோது, எனக்கு ஒரு புதிய நோக்கம் கிடைத்தது. சட்டத்தை மீறுவதாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன். பிரபல கொள்ளையன் 'ராபின் ஹூட் பாணியில்' தான் திருடிய நகை, பணத்தை கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 ஏழை மாணவர்களின் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தினேன். மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.

    திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன். மாணவர்களுக்கு நிதியுதவி செய்ததை தவிர, தனது 2 உதவியாளர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 ஆட்டோரிக்ஷாக்களை வாங்கியதாக கூறினார்.

    இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கல்விக்கு நிதியளிக்கவும், வாகனங்கள் வாங்கவும் ஷிவு பயன்படுத்தியதாக கூறப்படும் 14 லட்சம் ரூபாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட திருடர்களிடமிருந்து நாங்கள் எல்லா வகையான கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அசாதாரணமானது. அவர் உண்மையை சொல்கிறாரா? அல்லது அனுதாபத்தை பெற முயற்சிக்கிறாரா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலும், திருடர்கள் பிடிபட்டவுடன் உணர்ச்சிகரமான கதைகளை கொண்டு வருவார்கள். உண்மைகளை கண்டறிய நாங்கள் ஆழமாக ஆராய்வோம். அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு குற்றம் நடந்துள்ளது. அவரது கூற்றுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம் என்றார்.

    • அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது.
    • கல்வி கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் வசூல் செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது.

    கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.6,000, சிறப்பு கட்டணமாக ரூ.2,000, பல்கலைக்கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட ரூ.7,473 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • ஏழை குழந்தைகளை கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி.
    • மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.

    இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளி களின் கட்டணக் கொள்ளை யைத் தடுக்க முடியவில்லை. இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்? அதை விடுத்து அரசிடமும் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஏழைக் குழந்தைகளையும் கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதை அரசும் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.

    கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்த கட்ட ணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×