என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical colleges"

    • இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி. பி.எஸ். இடங்களை நிரப்ப 3 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 400 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன.

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லுரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 58 நிரப்பப்படாமல் உள்ளன. நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லுரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால் சிறப்பு கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இடங்கள் ஒதுக்கீட்டு நடைமுறை நாளை (16-ந்தேதி) இறுதி செய்யப்பட்டு 17-ந்தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கட்டண குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும்.
    • 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 77 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,050 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கிடையே தேசிய மருத்துவ ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் திருத்தப்பட்ட பட்டியலில் தமிழ்நாட்டிற்கான மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.

    இதனால் இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக அரசு விண்ணப்பிக்காததால் நாமக்கல், திருப்பூர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரி கள் கூறும்போது, மருத்துவ இடங்களை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்வதற்கு முன்பே, மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அல்லது புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கான காலக்கெடு, முடிவடைந்தது. காலக்கெடுவுக்குப் பிறகு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை.

    3 மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்களை அதிகரிக்க எங்களிடம் உள்கட்டமைப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இடங்களை அதிகரிக்க வேண்டுமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என்றனர்.

    இதற்கிடையே 2025-26-ம் ஆண்டுக்கான இடங்களை அதிகரிப்பதற்கோ அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கோ விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

    • கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன.
    • எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது

    சென்னை:

    நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி டாக்டர்கள் மற்றும் ஆயுஷ் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் டாக்டர்கள் அதாவது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ டாக்டர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு டாக்டர்கள் இருக்கின்றனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 536 கல்லூரிகளும், 80 ஆயிரத்து 312 இடங்களும் என உயர்ந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டில் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கின்றன.

    மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.

    அதேநேரத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளது.

    இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
    • சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

    டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாண்டம்பாளையத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மாநில தேர்வு குழுவுடன் பகிர்ந்து கொள்ளும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 150 இடங்களுக்கு நீட்-2023 மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்-தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019-ன் கீழ் நிறுவப்பட்டு 2021-ம் ஆண்டில் சேர்க்கையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

    தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். 'சீட்'கள் கிடைக்கும்.

    இதன் மூலம் மொத்தம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணி்க்கை 11,575-ஆக உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 74-ஆக அதிகரித்து உள்ளது.

    • மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • ஜூன் மாதம் இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் அமைப்பின் நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளர், கன்வீனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அறிவிக்க வேண்டும். மேலும் சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஆவன செய்யவேண்டும்.

    ஜூலை மாதம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும்.

    அதே போல் ஜூன் மாதம் இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 550 இடங்களில் 50 சதவீத இடங்களான 275 எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை.

    தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் தமிழகத்தில் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

    • தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள டுமிங்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு பதிவு செய்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமக்கு நாமே மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாகவே நடந்துள்ளது. தற்போது சென்னையில் குடிசை பகுதிகளை மையமாக வைத்து மருத்துவ முகாம்கள் நகருகிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை.

    இந்த கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய அமைப்பு அங்கு ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாததை காரணம் காட்டி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. இது 30 நிமிடத்தில் சரி செய்யக் கூடிய விஷயம். இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?

    நேற்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டார்கள்.

    தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்.

    இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக மாநில அரசின் உரிமைக்கு எதிராக செயல்படுவது அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுத்தும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

    அப்போது எல்லா விஷயங்களையும் எடுத்துரைப்போம். இந்த மாதிரி தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடு, கண்காணிப்பு கேமராக்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவற்றை காரணமாக சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, திருச்சி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை தேசிய மருத்துவ ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
    • 3 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக ஏராளமான கேள்விகளையும் தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக உயர்ந்துள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதுபோல முதுகலை மருத்துவ படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 107 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் அவற்றின் தரத்தை உறுதிபடுத்துவதில் தேசிய மருத்துவ ஆணையம் தீவிரமாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது.

    ஆனால் இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் விதிமுறைகளை பின்பற்ற தவறி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரிகளின் தரம் குறைந்து இருப்பதாக கருதப்பட்டது. இதேநிலை நீடித்தால் சர்வதேச தர அளவுக்கு இந்திய மருத்துவர்களை உருவாக்குவதில் குறைபாடுகள் ஏற்படும் என்று புகார்கள் எழுந்தன.

    மருத்துவ கல்லூரிகளில் தரம் குறைந்துகொண்டே போனால் உலக அளவில் இந்திய டாக்டர்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டு விடும் என்று கூறப்பட்டது. இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    அந்த ஆணையம் நடத்திய ஆய்வில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இல்லாதது தெரியவந்தது. உள்கட்டமைப்பு வசதிகளும் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வருகையில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாடு முழுவதும் 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

    தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பேராசிரியர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்பட்டது.

    ஆனால் இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார். மருத்துவ கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்ற சிறிய காரணத்துக்காகவே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், 'தமிழகத்தில் 1021 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தகுதியானவர்களை தேர்வு செய்து விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே தமிழகத்தில் 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குனரக குழு டெல்லி சென்றுள்ளது. இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமையில் அந்த குழு டெல்லி சென்றிருக்கிறது.

    இன்று அந்த குழுவினர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக முறையிட உள்ளனர்.

    சென்னை, திருச்சி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை தேசிய மருத்துவ ஆணையம் பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த 3 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக ஏராளமான கேள்விகளையும் தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுள்ளது.

    அந்த கேள்விகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரக குழுவினர் விளக்கம் அளிக்க உள்ளனர். இதற்காக அவர்கள் உரிய ஆவணங்களை தேர்வு செய்து கொண்டு சென்றுள்ளனர். ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் விரிவான பதில் தயார் செய்துள்ளனர்.

    அவற்றையும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க உள்ளனர்.

    இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். நாளை அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

    அதன்பிறகு அவர் டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்வார்.

    அதன்பிறகுதான் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக என்ன முடிவு எட்டப்படும் என்பது தெரியவரும்.

    • கவர்னர் தமிழிசையிடம் வையாபுரி மணிகண்டன் மனு
    • தனியார் மருத்து வக்கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கவர்னர் தமிழிசையை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 7 தனியார் மருத்துவ க்கல்லூரிகள் தங்களின் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசுக்கு வழங்கு வதாக உறுதியளித்த பின்னரே கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்லூரிகளில் 4 கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டன.

    இதனால் நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரி களில் அரசு ஒதுக்கீடாக ஒரு மருத்துவ இடம்கூட புதுவையை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வில்லை. புதுவையில் மீதம் உள்ள 3 தனியார் மருத்து வக்கல்லூரிகளில் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 3 தனியார் மருத்து வக்கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை. ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை மூலம் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற வே ண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.

    இத்தகைய சூழலில் 2 மருத்துவ கல்லூரிகளும் கூடுதலாக தலா 100 மருத்துவ இடங்களை உயர்த்திக் கொள்ள தேசிய மருத்துவ ஆணையத்திடம் முதல்கட்ட அனுமதியை பெற்றுள்ளது.

    இந்த 2 மருத்துவ கல்லூரிகளும் 50 சதவீத இடங்களை புதுவை அரசுக்கு கட்டாயம் ஒதுக்கினால் தான் புதுவை அரசு தடையில்லா சான்று வழங்கும் என நிர்பந்திக்க வேண்டும். இதன்மூலம் 100 ஏழை புதுவை மாநில மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே கவர்னர் இதற்கான உரிய நடவடிக்கையை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    • தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது.
    • மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது.

    சென்னை:

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே புதிதாக மாநகராட்சி சார்பில் ரூபாய் 28 லட்சம் செலவில் அமைக்கப்படும் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளான ஸ்டான்லி, தர்மபுரி உள்பட மூன்று கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகிய சிறு, சிறு குறைகளுக்காக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது போன்று தகவல் வெளியிடப்பட்டது.

    தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தேசிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

    இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது. ரத்தாகும் அ ளவிற்கு தமிழக அரசு விடாது. இன்று அல்லது நாளைக்குள் டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்.

    இந்த விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தாததால் சின்ன விஷயம் பெரிதாக்கப்பட்டு விட்டது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி உள்பட இரண்டு மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்ததும் நேரில் சென்று சந்தித்து பேசுவோம்.

    தமிழக கவர்னர் சிதம்பரம் சிறுமிகள் விஷயத்தில் தவறாக பேசிவிட்டார்.

    அதேபோல், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தும் தவறாக பேசினார். அதுபற்றிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், சின்ன குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த பிரச்சினையை மேற் கொண்டு பேச விரும்பவில்லை.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், கவர்னரும் விமர்சித்திருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீதும், நலனின் மீதும் அக்கறையில்லாதவர்கள் தான் இவ்வாறு விமர்சிப்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
    • மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி, மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளையும் ஆய்வு செய்த தேசிய மருத்துவ கவுன்சில் சில குறைபாடுகளை கண்டுபிடித்தது. இதையடுத்து இந்த 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

    இதனால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, எந்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகாது. ரத்து செய்யப்படும் அளவுக்கு அரசு நடந்து கொள்ளாது என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை தயார் செய்து தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் குழு டெல்லி சென்று அறிக்கை கொடுத்தது.

    அதன் பேரில் டெல்லி மருத்துவ குழுவினர் மீண்டும் தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து சென்றனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டையில் இன்று இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

    ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி, அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்ட நோட்டீசையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

    திருச்சி மருத்துவ கல்லூரியில் இன்று ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்ததும் அந்த கல்லூரியும் தொடர்ந்து இயங்க அனுமதி கிடைத்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×