என் மலர்
நீங்கள் தேடியது "Central Government"
- இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக நடவடிக்கை.
- தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தகவல்.
வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பொருந்தும், இதன்மூலம் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
- தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். இவர்களில், தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்று, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. திரிபுரா, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.
- 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது.
- FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக் கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்ததால் FCRA இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாநிலம் இந்த அனுமதியை பெறுவது இதுவே முதல் முறை.
முன்னதாக கடந்த 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.
- கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு சாதாரண வகைக்கு ரூ.105, சன்ன வகைக்கு ரூ.120 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
- மத்திய அரசிடமும் பேச்சு நடத்தி, ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் இந்த நெல் வகைகளுக்கு முறையே ரூ.2300, ரூ. 2320 கொள்முதல் விலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் குவிண்டாலுக்கு வெறும் ரூ.69, அதாவது 3% மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல.
ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1579 என்பதை அடிப்படையாக வைத்து, அதனுடன் 50% லாபம் சேர்த்து இந்த விலையை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. உற்பத்திச் செலவை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் நடைமுறை தவறு என்பது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2300 செலவாவதாக உழவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதே அளவுக்கு கொள்முதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டால் உழவர்களுக்கு லாபமே கிடைக்காது. வட்டிக்கு கடன் வாங்கி வேளாண்மை செய்யும் உழவர்கள், போதிய லாபம் கிடைக்காவிட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.
நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் போது உழவர்கள் நலனை மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை என்பதைப் போலவே, கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை நிர்ணயிப்பதில் தமிழக அரசும் துரோகம் செய்கிறது. கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு சாதாரண வகைக்கு ரூ.105, சன்ன வகைக்கு ரூ.120 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதைக் கொண்டு உழவர்களின் துயரத்தைத் துடைக்க முடியாது.
பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஒதிஷாவில் குவிண்டாலுக்கு ரூ.800 வீதமும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானத்தில் குவிண்டாலுக்கு ரூ.500 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், தமிழக அரசும் குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.800 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசிடமும் பேச்சு நடத்தி, ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
- வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும்.
- கியாஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்கவேண்டாம்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான கோடை மழை பெய்து வருகிறது. அதேசமயத்தில் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் வருகிற 29-ந்தேதி முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை பகல் நேரங்களில் வெயில் 113 டிகிரி முதல் 131 டிகிரி வரை கொளுத்தும்.
எனவே அந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதாகவும், இதனை குறிப்பிட்டு மத்திய அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த தகவலில், வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும். வீடுகளில் காற்றோட்டத்துக்காக கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கவேண்டும். அதிக வெப்பத்தால் செல்போன்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பயன்பாட்டை குறைக்கவேண்டும். தயிர், மோர், பழச்சாறு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை அதிகம் பருகவேண்டும்.
கியாஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்கவேண்டாம். மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பி வைக்கவேண்டாம் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசும் என்பது தொடர்பாக பரவி வரும் இந்த தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''இதுபோன்ற தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- பாகிஸ்தான் தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது.
சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தொடர்புடைய ஓடிடி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பாகிஸ்தான் தொடர்பான சினிமா, பாடல், போட்காஸ்ட், வெப் சீரிஸ் ஆகியவற்றை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்கப்பட்டது.
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இது தொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை நேற்று (மே 5) முதல் பின்பற்றப்படுகிறது.
விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் 'நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
- முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
டெல்லி வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் நகதாணியுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார்.
தற்போதைய பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு நிலை குறித்து இருவரும் பேசினார்கள். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி அவர்கள் விவாதித்தனர்.
இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடனான வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காக ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்கள் மகத்தான பங்களிப்புக்காக உங்களை பாராட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
லாவோஸ் நாட்டில் 2024-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் சந்தித்தனர். தற்போது 6 மாதங்களுக்கு பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் 2-வது முறையாக சந்தித்து உள்ளனர்.
- பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தபால் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களில் பரிமாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாமக-ன் நிலைப்பாடு.
- மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது!
இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக 1998-ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாமகவின் கோரிக்கையை ஏற்று 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 24.10.2008-ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பா.ம.கவைச் சேர்ந்த அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ் 140-க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துப் பெறப்பட்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதனடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட மன்மோகன்சிங் அரசு, அதன்பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை வெளியிடவில்லை.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் நான் நேரில் வலியுறுத்தினேன். மூன்று முறை கடிதம் எழுதினேன். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
பா.ம.க.வின் முயற்சியால் கடந்த மூன்று முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமாகி கடைசி நேரத்தில் கை நழுவிய நிலையில், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத் தான் இருக்கும் என்பதாலும், தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும் தமிழக அரசு 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ் மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே ( Caste Survey) எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிப்பு.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார்.
அப்போது, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றார்.
மேலும் அவர், "சுமார் 93 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் சாரிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை வரவேற்கிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.
அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு கைவிட்டுவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.
தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அதிமுக
சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
- மத்திய அரசின் உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருது ஒன்று.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அஜித்குமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.