நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டம்

உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டம்
Published on

இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.

இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.

ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.

மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.

இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com