என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி"
- 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
- சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன
டெல்லியின் ரோகிணி செக்டார் -17 இல் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ மிக வேகமாகப் பரவியதால் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 11:55 மணிக்கு தகவல் கிடைத்தது. 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயை முழுமையாக அணைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.
இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி அமித் கோயல் தெரிவித்தார்.
குடிசைப் பகுதியின் முன்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உயரமான சுவர்கள் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன, இதன் காரணமாக தீ வேகமாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக்கொண்டுருந்தார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த தர்மேந்திரா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லி, ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் பராமரிப்பாளராக இருந்த 37 வயது பெண் தனது மகளின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த தர்மேந்திரா (35) என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, நள்ளிரவில் தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்த தர்மேந்திரா சுவர் ஏறிக் குதித்துள்ளான்.
பெண் மற்றும் அவரது மகளின் கை, கால்களைக் கட்டிபோட்டுவிட்டு, சிறுமியின் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
தனக்கு நேர்ந்தது குறித்து அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- ஊழியர் ஒருவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக் கொண்டு சென்றார்.
- தூதரகம் அருகே இருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினார்கள்.
புதுடெல்லி:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஊழியர் ஒருவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக் கொண்டு சென்றார். 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கொண்டாட இந்த கேக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பாகிஸ்தான் தூதரக ஊழியர் மவுனம் சாதித்தார்.
சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வேதனை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக்குடன் கொண்டாடுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் தூதரக அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்றனர். தூதரகம் அருகே இருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினார்கள்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் அருகே இன்று பா.ஜ.க.வினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களும் உயிரிழந்தனர்.
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது இது முதல்முறை.
ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை இளவரசரும், மக்கா பிராந்திய துணை கவர்னருமான சவுத் பின் மிஷால் பின் அப்துல்லாசிஸ், வர்த்தக மந்திரி மஜித் அல் கசாபி ஆகியோர் வரவேற்றனர்.
21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஹஜ் யாத்திரை பற்றியும், அதில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு பற்றியும் மோடி பேசினார். பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி இன்று ஒரு தொழிற்சாலைக்கு சென்று அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுடன் உரையாட திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களும் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர்.
- விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதம்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் திடீரென சிங்கப்பூர் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மேலும் காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
சிங்கப்பூர், டெல்லி, மும்பை விமானங்கள் 3 மணி நேரம் வரை திடீரென தாமதமாக சென்றதால் அதில் பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதி
அடைந்தனர். அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்த விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
- அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள்.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று முன் தினம் திருமணம் செய்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா 2 படத்தில் வரும் சாமி பாடலுக்கு தனது மனைவி சுனிதாவுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது. "திருமணங்கள் எளிமையாக இருக்க வேண்டும், எந்த ஆடம்பரமும் இருக்கக்கூடாது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய பழைய வீடியோவை டெல்லி பாஜக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
"முதலில், அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள். பின்னர் கோடிக்கணக்கில் செலவு செய்து, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் குடும்ப திருமணங்களை நடத்துகிறார்கள்," என்று பாஜக விமர்சித்துள்ளது.
- ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்.
- அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.
டெல்லியின் சீலம்பூரில் வியாழக்கிழமை மாலை பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் குணால் என்ற 17 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டெல்லி காவல்துறை, இளம் பெண் தாதா ஜிக்ராவை கைது செய்துள்ளனர்.
ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.
2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை மீது கொலை முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில்- ஐ கொலை செய்ய முயன்றதாக ஜிக்ரா நினைத்துள்ளார். இதனால் அவர் தற்போது சாஹில் உடன் சேர்ந்து குணாலை கொலை செய்துள்ளார்.

ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.
ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா தற்போது சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
- இன்று அதிகாலை 20 ஆண்டு பழமையான 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதில் 3 3 குழந்தைகளும் அடங்கும்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் 4 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அவர்களை மீட்கும் பணி நடந்தது.
முதல் கட்டமாக கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
இந்நிலையில், டெல்லி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3 குழந்தைகளும் அடங்கும். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களில் கட்டிடத்தின் வீட்டு உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்துடன், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கட்டிட விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த கட்டிட விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
- இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
- மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்று அதிகாலை நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார்.
- நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஸ்டார்க்கின் அசத்தலான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரின் நான்காவது பந்தை வீசும்போது ஸ்டார்க் தனது பின்காலை வைட் லைனில் வைத்தார். இதனால் 3 ஆவது நடுவர் நோ-பால் கொடுத்தார். நடுவரின் இந்த முடிவு இணையத்தில் பேசுபொருளானது.
மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கூட வைட் லைனில் பின்கால் வைத்து தான் பந்துவீசினார், ஆனால் அவருக்கு நோ பால் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், புத்தூர் விதிகளுக்கு உட்பட்டு தான் பந்துவீசியுள்ளார் என்று நடுவர் அணில் சவுத்ரி விளக்கம் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில், புத்தூர் தனது பின்னங்காலை வைட் லைனில் வைத்தார். ஆனால் பந்து வீசுவதற்கு முன்னாள் வைட் லைனில் இருந்து காலை தூக்கி விட்டார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு தான் அவர் பந்துவீசினார் என்று நடுவர் அணில் சவுத்ரி தெரிவித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
- கெஜ்ரிவால் மகளின் திருமணம் ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று திருமணம் செய்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார்
இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.
- பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
- பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
டெல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒரு இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் டெல்லியைச் சேர்ந்த 24 வயது பிரியங்கா. தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வாட்டர் பார்க் -க்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை, பிரியங்காவும் நிகிலும் மதியம் 1 மணியளவில் கேளிக்கை பூங்காவிற்கு வந்தனர். மாலை ஆறு மணிக்கு இருவரும் ரோலர் கோஸ்டரில் ஏறினார்கள்.
ஊஞ்சல் அதன் உச்சத்தை அடைந்தபோது, பிரியங்காவைத் தாங்கி நின்ற ஸ்டாண்ட் சரிந்து, அவர் தரையில் விழுந்தார். பிரியங்கா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரியங்காவுக்கும் நிகிலுக்கும் ஜனவரி 2023 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் பிப்ரவரி 2026 இல் திட்டமிடப்பட்டது. பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.