என் மலர்
நீங்கள் தேடியது "ரீல்ஸ்"
- இன்ஸ்டாவில் தற்போது ஒரு புதிய க்யூட் வீடியோவை பிரபு தேவா வெளியிட்டுள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று ரீல்ஸ் வெளியிட்டு 2 சிறுவர்கள் வைரலானார்கள்
நடிகர் பிரபு தேவா அவ்வப்போது சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் இன்ஸ்டாவில் தற்போது ஒரு புதிய க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று ரீல்ஸ் வெளியிட்டு வைரலாக 2 சிறுவர்களை அழைத்து அவர்களுடன் பிரபு தேவா நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ரெண்டே பேருக்குதான் போட்டியே... ஒன்னு இன்ஸ்டா தேவா இன்னொன்னு பிரபு தேவா என்று ஜாலியாக சிறுவர்கள் பேசுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
- நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான்.
- எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை.
டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
17 வயது சிறுவன் தனது சகோதரியுடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஆனால் தனக்கு நீதி வேண்டும் என்றும், சிறுவனை வயது வந்தவராக கருதி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், சிறுவனிடம் காரைக் கொடுத்த அவனது தந்தை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வீடியோ வைரலாகி, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தொழிலதிபர் தந்தை, ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இது ஒரு மிகப்பெரிய தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் குடும்பமே இந்தச் செயலால் கடும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் ஆழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாயிடம் நான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கோருவேன்.
சம்பவம் நடந்த போது நான் வேலை விஷயமாக கோரக்பூரில் இருந்தேன். நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.
நான் வீட்டில் இருக்கும்போது எப்போதும் கண்டிப்பாகவே இருப்பேன். நான் இல்லாதபோது அவனது தாயாரையும் மீறி அவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான்.
எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. அங்கேயே இருந்து உதவி செய்தான். எனது மனைவி போன் செய்து தகவல் சொன்னவுடன், உடனடியாகக் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி நான் அறிவுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் சாலை விதிகளை மீறியதாக ஏற்கனவே பல அபராதங்களை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் வணிக ரீதியான தொழில் செய்து வருவதால், டிரைவர்கள்தான் பெரும்பாலும் இந்த வாகனத்தை ஓட்டுவார்கள். முந்தைய அபராதங்களுக்கு அதுவே காரணம்" என்று பதிலளித்தார்.
- சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், தேர்வுகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கியது.
- கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான்.
டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 3 காலை 11:57 மணியளவில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. காரில் அந்த சிறுவனுடன் அவனது சகோதரியும் இருந்துள்ளார். அவர்கள் காரை அதிவேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "23 ஆண்டுகளாக கணவர் இன்றி தனியாக கஷ்டப்பட்டு என் மகனை வளர்த்தேன். பிப்ரவரி 3 அன்று, அதிவேகமாக கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான். நான் ஒரு ஆதரவற்ற தாய், எனக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
- அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட ஆர்வம் கொண்டவர்கள் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் விபரீதத்தில் முடிகிறது.
லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் வீடியோவை எடுக்க முயன்று உயிரிழக்கும் சம்பவங்களும் தினசரி நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானாலும் விழிப்புணர்வு என்பது இல்லாததே வேதனையாக உள்ளது. லைக்கிற்கு ஆசைப்பட்டு 27 வயதான பெண் செய்த செயலால் இன்றைக்கு அப்பெண்ணின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த மோகினி என்பவர் இணையதளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று வித்தியாசமான ரீல்ஸை எடுக்க முடிவு செய்த அவர், அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார். அப்போது கால் தடுமாறி கழுத்தில் கட்டிக்கொண்ட கயிறு இறுக்கியதால் மோகினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை.
சில மணிநேரம் கழித்து மோகினியின் 4 வயதான மகள் அறைக்குள் நுழைந்த போது தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தம் போடவே இச்சம்பவம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரீல்ஸ் எடுக்க ஆசைக்கப்பட்ட மோகினி செய்த செயலால் இன்று அவரின் 4 வயது மகள் தாயை இழந்து தவிக்கிறாள்.
- மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
- இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில சமயம் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேம்பாலத்தின் மேலே கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து முகமது ஃபைசான் (22) என்ற இளைஞர் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அஜித் குமார் பல சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
- "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
- இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.
சிவகாசியில் சாலையில் சண்டையிடுவது போல் நடித்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து 2 இளைஞர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் (21), வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
- தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.
சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் பரத் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்
கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார்.
- பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் சண்டிலா அருகே உள்ள முரார்நகரை சேர்ந்தவர் ஷீலு. இவருக்கும் அடமாவ் கிராமத்தை சேர்ந்த சாண்டீரா என்கிற பப்லு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
புதுமண தம்பதிகள் இருவரும் அடமாவ் கிராமத்தில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். ஷீலு கர்ப்பிணியானார்.
இந்தநிலையில் வீட்டை விட்டு சென்ற பப்லு, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பப்லுவை தீவிரமாக தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.
8 ஆண்டுகளாக பப்லு பற்றிய எந்த தகவலும் தெரியாமல், ஷீலு தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார். அதில் ஒரு வீடியோவில் மாயமான தனது கணவர் பப்லு இருப்பதை பார்த்தார். பல முறை அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடியபோது பப்லு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் லூதியானா சென்று பப்லுவை தேடிப்பிடித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.
இதையடுத்து அவரை சொந்த கிராமத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு எதற்காக அவர் வீட்டை விட்டு ஓடினார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.
பப்லு ஓடிப்போனதற்கு 8 ஆண்டுகளாக பழியை சுமந்து வந்த ஷீலு, மீண்டும் தனது கணவரை ஏற்பாரா என்பதும் பின்னர்தான் தெரியவரும்.
- தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.
- விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
டெல்லி: சமூக ஊடகங்களில் மனைவி ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நஜாப்கரின் ரோஷன்புராவில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான அமன் இ - ரிக்ஷா ஓட்டுநராக பணி செய்து தனது மனைவி மற்றும் 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை காப்பாற்றி வந்தார்.
இவரது மனைவி சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.
இது பிடிக்காத கணவன் அமன் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமன், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அமன், விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் தகவலறிந்து விரைந்த போலீஸ் அமனை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கோயில் குளத்தில் ஜாஸ்மின் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயில் குளத்தில் யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்துக்கள் அல்லாதவர்கள் குருவாயூர் கோவில் குளத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் கோவில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி தேவசம் போர்டு ஜாஸ்மின் மீது புகார் அளித்தது.
இந்நிலையில், குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, அதன் புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தனிடையே,ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராமில் 'Link a Reel' என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
- ஒரு தொடராக ரீல்ஸ்களைப் பார்க்க இந்த அம்சம் உதவும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வசதியாக 'Link a Reel' என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ஒரு தொடராக ரீல்ஸ்களைப் பார்க்க இந்த அம்சம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






