search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Instagram"

  • வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
  • இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

  மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

  அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

  இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

  பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
  • வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது

  அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 2017 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டிரம்ப் ]2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

   

  அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை டிரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால் 2021 இல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன.

   

  அதனைத்தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

   

  ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக டொனால்டு டிரம்பின் எக்ஸ் [டிவிட்டர்] மற்றும் யூடியூப் கணக்குகள் மீதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து அதை மறைக்க பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்
  • மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்.

  பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லார்' படத்தின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும்  புகழ்பெற்றவர் நடிகர் மேத்யூ மெக்கானஹே. இவர் நடிப்பில் வெளியான 'உல்ப் ஆப் வால் ஸ்டிரீட்' 'டாலஸ் பையர்ஸ் கிளப்', 'தி ஜென்டில்மேன்' ஆகியவை பேசப்பட்ட படங்கள் ஆகும். இன்டர்டெல்லாருக்கு அடுத்த படியாக இவர் நடித்த 'ட்ரூ டிடக்டிவ்ஸ்' வெப் சீரிஸுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

   

  இந்நிலையில் மேத்யூ தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் அவரது வலது புற கண்கள் வீங்கிய நிலையில் உள்ளன. தேனீக்கள் கொட்டியதால் அவருக்கு இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

   

  இது படப்பிடிப்பின்போது ஏற்பட்டுள்ளதா என்று படத்தைப் பார்த்து கலவலையடைந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர். கடந்த 2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முகத்தில் அவரே கடுமையான  காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'டாலஸ் பையர்ஸ் கிளப்' படத்தில் ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை மேத்யூ வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது. 

   உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • 21.07 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
  • BTS உறுப்பினர் V-ன் பதிவு 21.01 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

  இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

  உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

  ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

  V பதிவிட்டிருந்த தனது செல்லப்பிராணியின் புகைப்படங்கள் 21.01 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்த நிலையில், விராட் கோலி பதிவிட்ட டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட புகைப்படங்கள் 21.07 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.

  இதற்கு முன்பு நடிகை கியாரா, சித்தார்த்தின் திருமண புகைப்படம் தான் இந்தியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் வாங்கி சாதனை புடைத்திருந்தது. அந்த சாதனையை அண்மையில், விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை புகைப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

  • ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது.

  மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளார். இதனையடுத்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

  சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

  சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நெபுலைசர்' கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் "ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.

  ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

  இதனையடுத்து, பலரும் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பேட்மிட்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

  அதில், 'மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

  இறுதியாக இத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய சொந்த அனுபவத்தை தான் நான் பகிர்ந்தேன். இருப்பினும் பொதுவெளியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

  இன்று தங்களது 15 ஆம் ஆண்டு திருமண நாளை எம்.எஸ்.டோனி - சாக்ஷி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

  • சமீபத்தில் வெளியான 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.
  • வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.


  நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.

  இந்நிலையில் படத்தின் காலண்டர் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இதனை படத்தின் நிறுவருமான லைகா வெளியிட்டுள்ளது.


  • சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது.
  • புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன்.

  இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. இந்த படத்தின் 2-ம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகி உள்ளது. ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர இருக்கும் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

  சென்னை, மும்பை, சிங்கப்பூரில் நடந்த இந்தியன்-2 பட விழாவில் கமல் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். மும்பையில் நடந்த படத்தின் விழாவில் இந்தியன் முதல் பாகத்தில் நடித்த மனிஷா கொய்ராலா கமல்ஹாசனை நேரில் சந்தித்தார்.

  இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனிஷா கொய்ராலா நான் இணைந்து நடித்த புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன். சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது.

  அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் தன்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருப்பார் என பதிவிட்டுள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.
  • அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

  ஆடுகளம், வந்தான் வென்றான். ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டாப்சி பன்னு. லாரன்ஸ் நடித்த முனி 3 படத்தில் பேயாக நடித்து மிரட்டினார்.

  தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வந்தார். ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடித்த 'டங்கி' என்ற படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

  இந்நிலையில் டென்மார்க் பேட்மின்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உதய்பூரில் நடந்தது.

  திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டாப்சி.

  அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு என் உதடுகளும் உள்ளங்கால்களும் சிவந்திருக்கும் போது பச்சையாக என்னை நோக்கி வராதே என தலைப்பிட்டு படத்தை பகிர்ந்துள்ளார் டாப்சி.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
  • நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

  இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

  இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.

  இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.

  தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

  ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

  • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
  • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

  இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

  பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

  இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

  பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

  உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
  • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

  இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

  பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

  இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

  ×