என் மலர்
நீங்கள் தேடியது "Rashmika Mandanna"
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிமல்
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிமல்
இந்நிலையில் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த இந்த டிரைலரில் விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு கலக்கல் உடையில் நடனம் ஆடினர்.
- இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மும்பையில் நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டை சேர்ந்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கீகி ஹதீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், அலியா பட், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக்கான் உலகம் முழுவதும் வசூலில் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக சாதனை படைத்த பதான் படத்தில் இடம் பெற்ற ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
இதேபோன்று, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்து, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடும் வீடியோ பலரையும் கவந்து வருகிறது. ஆலியா பட்-ராஷ்மிகா இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடிய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.
- தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
- சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
A very very special day, got an award, had a performance… feel absolutely grateful for everything and everyone in my life ? pic.twitter.com/PurNGOHOtk
— Rashmika Mandanna (@iamRashmika) February 27, 2023
- தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
- விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றது தவறா? என்று நடிகை ராஷ்மிகா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர். நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அவருடன் மாலத்தீவுக்கு சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு.
வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என்றார்.
- நடிகை ராஷ்மிகா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை.
- இவர் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா மந்தனா
'வாரிசு' படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதில் நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

ராஷ்மிகா மந்தனா
நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பது தெரியும். அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல. எல்லோரையும் எப்படி மகிழ்விப்பது என்பதுதான் எனது தினசரி சிந்தனையாக இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா
உண்மையில், என்னை மட்டுமல்ல நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய்யான தகவல்களையும், குறிப்பாக நேர்காணல்களில் நான் சொல்லாத விஷயங்களுக்காக நான் கேலி செய்யப்படுவது என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது.

ராஷ்மிகா மந்தனா
என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாக இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மேம்படுத்த உதவுகின்றன. என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. உங்களுக்காக நான் கடினமாகவும் சிறப்பாகவும் உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிகை ராஷ்மிகா ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

ராஷ்மிகா மந்தனா
இவர் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அமிதாப் பச்சனுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'குட் பை' திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில், நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விரைவில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாவது வாரம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களில் கவனத்தை ராஷ்மிகா ஈர்த்தார்.
- சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

ராஷ்மிகா மந்தனா
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்கிய அவர் தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகையை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ராஷ்மிகா இந்தி படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்களில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள இயக்குனர்கள் குழப்பத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களில் கவனத்தை ராஷ்மிகா ஈர்த்தார்.
- சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தனது செல்ல நாய் குட்டிக்கும் விமானத்தில் செல்வதற்கு டிக்கெட் போடும்படி கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியானது.

ராஷ்மிகா மந்தனா
இந்த செய்தி நேரடியாக ராஷ்மிகாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் குறித்து அவர் சமூக வலைத்தளத்தின் வழியே பதிலளித்துள்ளார். அட கடவுளே!! எனது அன்பு செல்வங்கள் அனைத்தும் இதுபோன்ற விசயங்களுக்கு இலக்காவது கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன்.

ராஷ்மிகா மந்தனா
ஆரா (ராஷ்மிகாவின் செல்ல நாயின் பெயர்)என்னுடன் பயணம் செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் கூட.. அது என்னுடன் பயணிக்க விரும்பவில்லை..ஆரா ஐதராபாத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளது. உங்கள் கவலைக்கு எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா, தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை என்ற படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர, ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சித்தார்த் மல்கோத்ராவின் மிஷன் மஞ்சு படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்படித்தக்கது.

Very happy to share that pooja of our’s next #Karthi19 was held earlier today 😊😊 @Karthi_Offl@iamRashmika@Bakkiyaraj_k@rajeevan69pic.twitter.com/COsIKRDYsA
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 13, 2019