என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pushpa"

    • அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
    • கெஜ்ரிவால் மகளின் திருமணம் ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று திருமணம் செய்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார்

    இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.

    • ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தியபோதும் புஷ்பா பட பாணியில் ஹசரங்கா கொண்டாடினார்.

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், கெய்க்வாட் என 4 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தியபோதும் புஷ்பா பட பாணியில் ஹசரங்கா கொண்டாடினார்.

    இந்நிலையில், விக்கெட் வீழ்த்தியதை 'புஷ்பா' பட பாணியில் கொண்டாடியது குறித்து பேசிய ஹசரங்கா, "நான் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதனால்தான் சிறந்த வீரரான ருதுராஜின் விக்கெட்டை வீழ்த்தியபோது 'புஷ்பா' பட பாணியில் கொண்டாடினேன்" என்று தெரிவித்தார்.

    • தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய்யுடன் ‘வாரிசு’ படங்களில் நடித்து இருக்கிறார்.
    • ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

    கன்னடத்தில் 2016-ல் வெளியான 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் நடித்த 'புஷ்பா' படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். பட வாய்ப்புகளும் குவிந்தன.

    தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்', விஜய்யுடன் 'வாரிசு' படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுசுடன் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் நடித்த 'அனிமல்', 'சாவா' படங்களும் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஷ்மிகா வைத்துள்ள சொத்துக்கள் விவரம் பற்றிய தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை எட்டும் நிலையில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ராஷ்மிகா மந்தனா சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும், பல வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் சம்பாதிக்கிறார். பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடு உள்ளது. நிறைய விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ளார். மும்பை, கோவா, கூர்க், ஐதராபாத் பகுதிகளிலும் அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளனவாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
    • அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார்.

    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த 'புஷ்பா' படம் 2021-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

    இதையடுத்து 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரூ.1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. அல்லு அர்ஜுன் சந்தன கட்டைகளை கடத்துபவராக நடித்து இருந்தார்.

    கிளைமாக்சை மூன்றாம் பாகத்துக்கான தொடர்ச்சியோடு முடித்து இருந்தனர். இதையடுத்து புஷ்பா 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில் 'புஷ்பா' படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, ''புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை நிச்சயமாக எடுப்போம். 3-ம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த படங்களை முடித்து விட்டு புஷ்பா 3-ம் பாகத்தில் நடிப்பார். 2028-ம் ஆண்டு புஷ்பா 3-ம் பாகம் திரைக்கு வரும்'' என்று படம் குறித்து புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    இந்நிலையில் 'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று (01.12.2022) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    மேலும் ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் 'புஷ்பா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் சமீபத்தில் படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    புஷ்பா படக்குழு

    புஷ்பா படக்குழு

    'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சுகுமார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'புஷ்பா -தி ரூல்'.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா-தி ரூல் போஸ்டர்

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் அறிமுக டீசர் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், 'புஷ்பா' திரைப்படம் குறித்து திருப்பதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஜி காந்தா ராவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறியதாவது, செம்மர கடத்தலை தடுப்பதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் குறித்து தவறாக சித்தரிக்க வேண்டாம். கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு போலீசை லஞ்சம் வாங்கும் குண்டர்களாக காட்டியது வேதனை அளிக்கிறது. இரண்டாம் பாகத்தில் கடத்தலைத் தடுக்க குடும்பத்தை விட்டு காடுகளுக்குச் சென்று பணிபுரியும் காவலர்களை சரியாக காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா 

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.


    புஷ்பா -2

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஃபகத் பாசில் புஷ்பா முதல் பாகத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'புஷ்பா' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சாரிடம் சென்று ஆசிபெற்றேன். நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சார். அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது" என்று பதிவிட்டுள்ளார்.




    • தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார்.
    • திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.

    புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். இவருக்கு காக்கிநாடவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் ஜெகதீஷ் வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த இளம் பெண் ஜெகதீஷை ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனை அறிந்த ஜெகதீஷ் இளம் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராரில் ஈடுபட்டார். கடந்த மாதம் இளம் பெண் வாலிபருடன் உல்லாசமாக இருந்தார்.


    ஜெகதீஷ் இதனை சமையலறை ஜன்னல் வழியாக தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்தார். சிறிது நேரம் கழித்து இளம் பெண் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி தான் எடுத்த போட்டோக்களை அந்த பெண்ணிற்கு காட்டினார். அப்போது இளம் பெண்ணுடன் இருந்த வாலிபர் ஜெகதீசை விரட்டி அடித்து விட்டு போலீசில் புகார் செய்வதாக தெரிவித்தார்.

    2 நாட்கள் கழித்து ஜெகதீஷ் எடுத்த அரை நிர்வாண போட்டோக்களை இளம்பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்தார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அரை நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக ஜெகதீஷ் இளம் பெண்ணை மிரட்டினார். இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



    இது குறித்து தகவல் அறிந்த பஞ்சகுடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இளம் பெண் செல்போன் எண்ணிற்கு கடைசியாக பேசியவர்கள் யார் என விசாரணை நடத்திய போது அவருடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஜெகதீஷ் நிர்வாண படங்களை காட்டி விரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர். 

    ×