புஷ்பா 3-ம் பாகம் குறித்து வெளியான புது தகவல்

புஷ்பா 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார்.
புஷ்பா 3-ம் பாகம் குறித்து வெளியான புது தகவல்
Published on

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த 'புஷ்பா' படம் 2021-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

இதையடுத்து 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரூ.1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. அல்லு அர்ஜுன் சந்தன கட்டைகளை கடத்துபவராக நடித்து இருந்தார்.

கிளைமாக்சை மூன்றாம் பாகத்துக்கான தொடர்ச்சியோடு முடித்து இருந்தனர். இதையடுத்து புஷ்பா 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் 'புஷ்பா' படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, ''புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை நிச்சயமாக எடுப்போம். 3-ம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த படங்களை முடித்து விட்டு புஷ்பா 3-ம் பாகத்தில் நடிப்பார். 2028-ம் ஆண்டு புஷ்பா 3-ம் பாகம் திரைக்கு வரும்'' என்று படம் குறித்து புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com