என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரெய்லர்"

    • இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
    • சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.

    நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.  லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது. 

    அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  


    • இந்த உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலு உங்க கண்ணுக்கு தெரியிறது ‘ஒரு மதம்’.
    • தெய்வத்தோட தலையிட்ட நாங்க தண்டிப்போம்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 

    டிரெய்லரில், "இந்த உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலு உங்க கண்ணுக்கு தெரியிறது 'ஒரு மதம்'. இந்த நாட்டுல எங்க பாத்தாலும் உங்க கண்ணுக்கு தெரியிறது ஒரு தர்மம், 'சனாதன இந்து தர்மம்'. தேசத்தோட தலையிட்டா நீங்க கண்டிப்பீங்க, தெய்வத்தோட தலையிட்ட நாங்க தண்டிப்போம்" போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது வெளிநாட்டினரால் சனாதன தர்மத்திற்கு வரும் ஆபத்தை தடுக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.  



    • ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
    • முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்தார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள 'விலாயத் புத்தா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய 'விலாயத் புத்தா' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டை கடத்தலை மையமாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.

    முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்த பிருத்விராஜ் மீண்டும் நாவலை தழுவிய படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.     

    மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்கு வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் கவின் பேசியதாவது:-

    எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன்  செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர்.

    வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது.

    அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும்.

    ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.

    நவம்பர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கவினுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

    இந்நிலையில், மாஸ்க் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 2.07 மணிக்கு வெளியாகும் என நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் புதிய டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட உள்ளனர்.

    பிரணவ் மோகன்லால் - இயக்குனர் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவாகும் ‘டைஸ் ஐரே’ படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.

    மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன். இவர் இயக்கிய ரெட் ரெயின், 2024ம் ஆண்டில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் போன்ற படங்கள் வித்தியாசமான கதையம்சங்களில் அமைந்திருந்தது.

    பிரம்மயுகம் படத்தை தொடர்ந்து, டைஸ் ஐரே படத்தை கூட்டாத தயாரித்துள்ளது ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்கள்.

    டைஸ் ஐரே படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒரே மாதத்தில் நிறைவுப்பெற்றது.

    டைஸ் ஐரே என்பது லத்தீன் மொழியின் பாடலில் வரும் வார்த்தை என கூறப்படுகிறது. இதற்கு, நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு என்பது பொருள்.

    இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள பகதஙயகங், படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.

    இந்த நிலையில், 'டைஸ் ஐரே' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகிலாக அமைந்திருக்கும் டிரெய்லரின் காட்சிகள் ரசிர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதைதொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    இந்நிலையில், தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில், இப்படத்தின் டிரெய்லர் வரும் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

     

    ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

    'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆர்யன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    மெஸன்ஜர் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகயுள்ளது.

    பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

    இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

    விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மெஸன்ஜர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போன்றே படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம்வர தொடங்கிவிட்டன.

    மேலும், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மெஸன்ஜர் திரைப்படம்  வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மெஸன்ஜர் செயலியால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

    பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.

    ×