என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sarathkumar"
- கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
- மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
கே.கே.நகர்:
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது.
காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள்.
நடிகர்கள் தற்போது எல்லாம் மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள் தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான்.
கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை.
இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம்.
தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்கள் ஆகலாம் எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.
பாராளுமன்ற தேர்தல் பண நாயகமாக தான் இருக்கும். எம்.பி. தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா என தெரியவில்லை.
5 சதவீத வாகனங்களுக்கான வரியை உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கின்றது. மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
தேர்தலில் தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன்.
சென்னை :
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி சுஜிர்தா (வயது 27) பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும், இனிமேல் இதுபோன்று எந்தவொரு மாணவிக்கும் துயரம் ஏற்படாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடப்பதற்கு, இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கல்லூரிக்கு படிக்கச் சென்ற மகளை இழந்து தீராத வேதனையில் வாடும், முதுநிலை மருத்துவ கல்லூரி மாணவியின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்துள்ளார். அதாவது, ராதிகா - சரத்குமார் தம்பதியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிரிமினல் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here's the first look of #criminal! Wishing the entire team all success. God bless.@Gautham_Karthik @realsarathkumar @plthenappan @SamCSmusic @Dhaksina_MRamar @prasannadop @eforeditor @parsapictures @BigPrintoffl @DoneChannel1 @shiyamjack pic.twitter.com/GKvQoRZDRN
— Silambarasan TR (@SilambarasanTR_) August 25, 2023
- நடிகை ராதிகா தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- இவர் தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது .

நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கிய நிலையில் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருக்கக் கூடிய சமயத்தில் நடை மூடப்படும் என்ற அறிவிப்பும், பக்தர்கள் தனியார் வாகனங்களில் வரக்கூடாது, அரசுப்பேருந்தில் வர வேண்டும் என பல வகையான வழிபாட்டு கட்டுப்பாடுகள் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கையில் குழப்பம் ஏற்படுவதாக அமைந்துள்ளது. இத்தகைய சூழல் முற்றிலும் நியாயமற்றது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இயக்குனர் சித்திக் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.
- இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சித்திக்
இந்நிலையில், நடிகர் சரத்குமார், இயக்குனர் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல மலையாள இயக்குனரும், தமிழில் சிறந்த படங்களை இயக்கியவரும், சிறந்த திரைப்பட எழுத்தாளருமான சித்திக் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக் பிரிவால் வேதனையில் வாடும், அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரம்பொருள்.
- இப்படத்தின் மூலம் முதல் முறையாக அனிருத் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார்.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் பரம்பொருள்.
- இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடல் இன்று வெளியாகும் என்று தெரிவித்து அந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
So kicked to share this with you all tomorrow. Here's a glimpse of what we've been working on. #Adiyaathi from #ParamporulMovie releasing tomorrow. @anirudhofficial@realsarathkumar @amitashpradhan @aravind275 @kashmira_9 @KavingarSnekan @u1records @onlynikil @gobeatroute pic.twitter.com/6qKm5hdlUa
— Raja yuvan (@thisisysr) August 7, 2023
- இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். போர் தொழில் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.