சரத்குமார் - சண்முக பாண்டியன் நடித்துள்ள 'கொம்புசீவி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.
சரத்குமார் - சண்முக பாண்டியன் நடித்துள்ள 'கொம்புசீவி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com