என் மலர்
நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan"
- விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
- "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
"புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது.
- 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.
மதுரை:
மதுரை வந்த தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனால் எங்களை சங்கிகள் என்கின்றனர். அது குறித்து கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது. மதுரையில் இன்று (ஜூன் 8) பா.ஜ.க, நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது. அவர் புது நிர்வாகிகளுக்கு புது ரத்தம் பாய்ச்ச உள்ளார். அவரது வருகை தி.மு.க., கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது.
உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் என அனைவருமே கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர். தமிழகத்தில் 3000 கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றாரா. கோவிலில் உள்ள தீபத்திற்கும் 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறீர்கள். இதை கடவுள்கூட மன்னிக்க மாட்டார்.
திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையால் எந்த ஒரு கண்டன போஸ்டரும் ஒட்ட முடியவில்லை. கண்ணகியால் நீதி கிடைத்த மண் மதுரை. 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
- நெல்லையப்பர் கோவிலுக்கு 450 கிலோ எடை கொண்ட வெள்ளித்தேர் தயாராகி வருகிறது.
சென்னை:
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
இன்று மட்டும் 24 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். நெல்லையப்பர் கோவிலுக்கு 450 கிலோ எடை கொண்ட வெள்ளித்தேர் தயாராகி வருகிறது.
முருகன் மாநாடு அல்ல. சங்கிகள் நடத்தும் மாநாடு, அரசியல் மாநாடு. அதற்கும் திருக்கோவில் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளது. நாங்கள் அரசியல் சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் 27 நாடுகளைச் சேர்ந்த முருகப் பக்தர்கள் பங்கேற்றனர். 2 நாள் நிகழ்ச்சி. நாங்கள் திட்டமிட்டு எந்த கூட்டத்தையும் வரவைக்கவில்லை. திட்டமிட்டு யாரிடமும் நாங்கள் அப்போது வசூல் வேட்டை நடத்தவில்லை. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 லட்சம் மக்கள் வந்தார்கள். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அந்நிகழ்ச்சி 7 நாட்களாக நீடிக்கப்பட்டது. ஆகவே அதையும், இதையும் ஒன்றாக்காதீர்கள். இது அரசியல் தேவைகளுக்காக, அரசியல் சூழல் நிலைக்காக, மதத்தால், இனத்தால் மக்களை எப்படியெல்லாம் பிளவுப்படுத்த முடியுமோ? அந்த பிளவிற்கான அந்த ஆயுதமான இந்த மாநாட்டை அவர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள்.
தமிழிசை சிறந்த அறிவாளி. அவரது ஆலோசனைகளை, போதனைகளை கேட்டுத்தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
300 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுத்துவிட்டு விளம்பரப்படுத்துகிறார். நாங்கள் இந்த கல்வியாண்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை தருகிறோம் என்றார்.
- அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்.
- அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்...
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் சாலைகள், உள்கட்டமைப்பு சரியில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு, தமிழிசை பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர். அங்கு தள்ளாடின்னே இருந்தவர்களை பார்த்துட்டு கவர்னராக வந்தவங்க. அதனால அவங்க எது பார்த்தாலும் தள்ளாட்டமாவே தெரிகிறது.
அன்பு சகோதரிக்கு மீடியா மேனியா. ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். நீங்கள் நின்று கொண்டு இருக்கும் இந்த சாலை எப்படி தரமானதாக இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் அடுத்த முறை கேள்வி கேளுங்கள் என்றார்.
இதனிடையே, திமுக துரோகி, காங்கிரஸ் எதிரின்னு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் வசைபாடாத ஆள் யாராவது இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்... என் வாயால் சொல்லக்கூடாது. அவர் வசைபாடா ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்றார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
- தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
* த.வெ.க. தலைவர் விஜய்தான்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது.
* தி.மு.க.வுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது.
* தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது.
- பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது... குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்... தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படும் கண்கள் பொசுக்கப்படட்டும் பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்... பெண்களைத் தவறாக பார்க்கும் எண்ணம் சிதைந்து போகட்டும்.. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்...
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
- இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்?
சென்னை:
முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று பாரதிதாசன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மின் தடை நிலவுகிறது. எங்கள் பகுதியில் இரவில் மட்டும் 3 முறை மின்தடை ஏற்பட்டது. முன்பெல்லாம் பகலில் ஓடிய அணில்கள் இப்போது இரவிலும் ஓடுகிறது. மின் துறை, மருத்துவ துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இல்லாத தடைகளை எல்லாம் சொல்லி தாண்டி கொண்டிருப்பது போல் கூறுகிறார்கள். முதலில் மின்தடையை நீக்குங்கள்.
தி.மு.க. அரசு எல்லா துறைகளிலும் தோற்று வருகிறது. இப்போது மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்கள். 1969-லேயே முதலமைச்சரின் அப்பா மரியாதைக்குரிய கலைஞர் முதல்வராக இருந்த போது மாநில சுயாட்சிக்காக ராஜ மன்னார் கமிட்டி அமைத்தார்கள். அந்த பரிந்துரையை தி.மு.க.வே பின்பற்றவில்லை. காரணம் அப்போது காங்கிரசுக்கு தி.மு.க. அடிமையாக இருந்தது. இப்போதும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு தான். பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள். உண்மையில் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி வருவது தி.மு.க. தான். பாரதியை கொண்டாடியவர் பாரதிதாசன். இன்று பாரதிதாசனை கொண்டாடும் நீங்கள் பாரதியை கொண்டாடதது ஏன்? கம்பனை கொண்டாடதது ஏன்? தமிழிலும் வேற்றுமையை விதைத்தீர்கள். இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்? வக்பு வாரியம் மூலம் அப்பாவி ஏழைகளின் பணம் சுருட்டப்படுகிறது. வக்பு பணம் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உண்மையை உணர்ந்த மக்கள் இதை முறியடிப்பார்கள். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்கிறார்கள். உங்கள் கூட்டணி நிலையை பாருங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திருமாவளவன் நிலை என்ன என்பதை பாருங்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.
விஜய் இப்போதான் பூத் கமிட்டி கூட்டத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு தான் அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பாரதிதாசன் கவிதையில் 'செந்தாமரை காடு பூத்தது' என்று ஒரு வரி உண்டு. அதே போல் தாமரை பூத்த தமிழ்நாடாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
- ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர், " தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…
எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!
2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
தமிழக மக்களின் Out of Control-ஆக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது.
ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
- கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.
- உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக்கூடாது என்று துணை வேந்தர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நேற்று துணைவேந்தர்களை கூப்பிட்டு என்ன சொல்லி இருக்கிறீர்களோ அதுதான் புதிய கல்வி கொள்கை. நீங்கள் ஒருவர் பேசுவதற்காக மட்டும் எழுதி கொடுக்கப்பட்டது அல்ல அது. மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.
அதை அறிமுகப்படுத்தும் போது பாரத பிரதமர் மோடி சொன்னது நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி. ஆக புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக படிக்காமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றி மாணவ மாணவிகளை உலக அரங்கிற்கு உயர்த்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள். உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்று சொல்லிவிட்டு பல்கலைக்கழகங்களை உங்கள் தலைமைக் கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, நேரில் வந்து ஆறுதல் சொன்ன அமித்ஷா அவர்களுக்கும் நன்றி.
தந்தை மறைந்த செய்தி கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு, பா.ஜ.க. கட்சி உங்களோடு துணை நிற்கிறது என்று கூறினார்கள்.
அதேபோல் ஜே.பி.நட்டா, சந்தோஷ், தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கள் இல்லத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. அமித்ஷா அவர்களும் என் தந்தையை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
- தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.