என் மலர்
நீங்கள் தேடியது "பிரேமலதா விஜயகாந்த்"
- கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
- பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரேமலதா கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று. தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை அன்பாக அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று.
- விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரேமலதா கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று. தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை அன்பாக அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.
- இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
- பெண்களுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. எரிவாயு சிலிண்டர் குறையும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும், விலை குறையவே இல்லை.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டுதான் போகிறது. அதனால் இன்றைக்கு இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை பரிசீலனை செய்து பெண்களினுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
- விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
- நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.
விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
- எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து, விஜயகாந்த் இல்லாமல் எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவர்கள்தான் இந்த பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறினார். மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, 2026 மார்ச் 18-ந்தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
- தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது.
- தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை (2006) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது. இதில் உள்ள நிறைய விஷயங்களை இந்த முறை பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தே.மு.தி.க சார்பாக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினோம்.
முதியோர் இல்லம், காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை தே.மு.தி.க. வலியுறுத்தி இருந்தது.
தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், முதியோர்கள் இல்லம், வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்ததால் பட்ஜெட்டை வரவேற்றோம் என்று கூறினார்.
- அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- காலை உணவு திட்டம்கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
- ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2006-ல் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம்.
மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தே.மு.தி.க. கொண்டுவர இருந்த திட்டம்தான். காலை உணவு திட்டம் கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2006-ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.
தற்போது போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை கைது செய்வது தொடர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரேமலதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கேள்வி: 2026-ல் தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக தே.மு.தி.க.வின் இந்த பட்ஜெட் பாராட்டை எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
கேள்வி: டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது?
பதில்: அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண் மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப் பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
- தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
- மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.
அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
- நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.
கிள்ளியூர்:
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் தே.மு.தி.க. குடும்ப விழாவும், நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசியதாவது:-
இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாக புதுக்கடை பகுதி விளங்குகிறது.
குமரி மாவட்டம் தாய்த்தமிழகத்தோடு இணைவதற்கு முக்கிய களமாற்றிய பகுதியாக புதுக்கடை உள்ளது. இந்த புதுக்கடையில் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி வருகிறது. நீங்கள் அனைவரும் கேப்டன் எப்படி இருக்கிறார் என்பது கேட்பது போல் இருக்கிறது. கேப்டன் சிறப்பாக இருக்கிறார். நலமாக இருக்கிறார். இன்றைக்கு சென்னை ஏர்போர்ட்டில் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.
உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையினுடைய இரு பக்கங்களாகும். குறுகிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்று அந்தஸ்தை பெற்ற கட்சி தே.மு.தி.க. ஆகும்.
தற்பொழுது தொய்வை சந்தித்தாலும் மீண்டும் எழுவோம் புதுக்கடையில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இது நேர்மையானவர்கள், அரசியல் தூய்மையானவர்கள் இருக்கக்கூடிய கட்சியினுடைய கூட்டம். பல்வேறு நிகழ்வுகளில் செல்வதற்காக வந்தபோது போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூ டாது என அனுமதி மறுத்தனர். எதற்கு இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை நாங்கள் அதை எதிர்த்து போலீசாரிடம் பேசி இந்த விழாக்களை நடத்தி உள்ளோம்.
10-க்கும் மேற்பட்ட உபசரிப்பு நிகழ்வுகள் நடந்தது. நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். நான் நல்லவர்களாக இருந்தது போதும் இனி வல்லவர்களாக மாற வேண்டும். நல்லவர்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள் முதுகில் குத்துவிடுகிறார்கள்.
இதனால் நம்மால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை. குமரி மாவட்டத்தில் வலுமிக்க கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் குமரி மாவட்டத்தை சீரழித்து வருகிறது.
பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது.
குமரியில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
- விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க.வும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
தேர்தல் களத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கேற்ப முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்துக்கான தேதி பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார். அவரை இளைய கேப்டன் என கட்சியினர் அழைத்து வருகிறார்கள். தே.மு.தி.க.வில் இளைஞர் அணியில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்குவது பற்றியும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தே.மு.தி.க நேர்மையான கட்சி நல்லவர் ஆரம்பித்த கட்சி.
- எங்கள் தொண்டர்களின் வியர்வையில் சம்பாதித்த காசில்தான் நாங்கள் உதவி செய்கிறோம்.
கோவை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கணபதி பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்களான கரும்பு, வெல்லம், பச்சரிசி,முந்திரி பருப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் அங்கு பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கல் வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
சாதி, மதம், இனம் மொழிக்கு அப்பாற்பட்டது தே.மு.தி.க நாங்கள் பொங்கலும் கொண்டாடுவோம், ரம்ஜானும் கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ்சும் கொண்டாடுவோம். சின்ன கவுண்டர் படம், வானத்தைப்போல படம் போன்றவற்றில் கொங்கு மண்டலத்தை காட்டியது விஜயகாந்த். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்றவர் விஜயகாந்த். ரேஷன் பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னவர் விஜயகாந்த். யாரும் மறந்து விடாதீர்கள்.
தே.மு.தி.க நேர்மையான கட்சி நல்லவர் ஆரம்பித்த கட்சி. என்றும் தவறான வழியில் தே.மு.தி.க செல்லாது. எங்கள் தொண்டர்கள் எங்கும் வசூல் செய்தது இல்லை. எங்கள் தொண்டர்களின் வியர்வையில் சம்பாதித்த காசில்தான் நாங்கள் உதவி செய்கிறோம்.
அ.தி.மு.க.வை வெட்கக்கேடாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அ.தி.மு.க. கொண்டாடவில்லை.
தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாருக்கு தி.மு.க நிர்வாகிகள் வன்கொடுமை செய்துள்ளனர்.பெண் போலீசாரை துன்புறுத்திய தி.மு.க நிர்வாகியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும்.
சர்க்கரையை கொண்டு பொங்கல் நடத்தும் ஆட்சி தி.மு.க ஆட்சி. சர்க்கரை பொங்கல் என்றால் சர்க்கரை போடுகிறீர்களா. வெல்லத்தை கொண்டு செய்வது தான் பொங்கல் கலாசாரம். விவசாயிகள் வயிறு எரிகின்றனர். கரும்பு விளைவிப்பவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும்.
பொங்கல் தொகுப்பில் 2500 ரூபாய் மக்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும்.ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் கவர்னர் முதன்முறையாக வெளிநடப்பு செய்த நிகழ்வு தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது.கவர்னர் சாதித்துக் காட்டிருக்க வேண்டும். கவர்னருக்கு தே.மு.தி.க கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. அன்று சட்சபையில் நடைபெற்றது முழுவதும் நாடகம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் அவர் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.