என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் ராஜகண்ணப்பன்"
- பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
- தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை.
சென்னை:
அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024-25-ல் சுமார் 7 லட்சம் லிட்டர் அதிகரித்து 30 லட்சம் லிட்டர் என்ற அளவில் விற்பனையாகிறது..
மேலும் பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
- மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மீனவ தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
மீனவ மக்களுக்காக ராமநாதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க மீனவர் மாநாடு நடத்தியவர் முதல்வர். சென்னையில் வெள்ளம் வந்த போது ஒரே நாளில் வெள்ளத்தை அகற்றி மின்சாரம் வழங்கியவர் நமது முதல்வரின் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி தந்தவர் முதல்வர் தான். மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர் தான் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
சாதி மதமின்றி இயங்கும் ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமானலும் சரி திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நிர்பந்தம் உள்ளது. முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
மீனவர் மீது அக்கறை உள்ளவர்கள் என இந்தியாவில் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி என கூறலாம் ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு நமக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது,
`பா.ஜ.க. கடல் தாமரை மாநாடு நடத்தி மோடி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, படகுகள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்படாது, அதையும் மீறி பிடித்தாலே பாதுகாப்புக்கு இந்திய ராணுவம் வந்து நிற்கும் என்றார்கள்.
ஆனால் 10 ஆண்டுகளாக வாக்குறுதியை காட்டில் பறக்கவிட்டு விட்டார்கள். மீனவர் தினம் கொண்டாடும் இந்நாளில் ஒரு பக்கம் கண்ணீரும் கம்பலையுமாக மீனவர்கள் உள்ளார்கள். மீனவர்கள் தான் பூர்வ குடிகள், மண்ணின் மக்கள்.

மீனவர்களை ஓரளவு தாங்கி பிடிப்பது தமிழகம் தான். ஆனால் இது போதாது அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது' என்றார்.
விழாவில் மேயர் மகேஷ், மீனவர் அணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பிஷப் நசரேன் சூசை, டன்ஸ்டன், நிக்சன், மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
- திருப்பூரில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது மீதமுள்ள பால் கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருப்பூரில் 50ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் விரைவில் பன்னீர் பேக்டரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தான் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் தான் பால் விலையை இன்னும் உயர்த்தாமல் ரூ.40க்கு வழங்கி வருகிறோம். ஏழை எளிய மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பத்திரப்பதிவுகள் எதுவும் இன்று வரை ரத்து செய்ய வில்லை.
- நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும்.
சென்னை:
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளது குறித்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறைக்கும் மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பி உள்ளோம்.
இந்த அரசு நிலம் ஜி.எஸ்.டி. சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது.
இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைத்துள்ளோம். சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது.
இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வரு வாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்களை புகாருடன் இணைத்துள்ளோம்.
முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில் சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக் கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளார்.
பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.
டெக்கான் பன் ஐலேண்ட் அண்ட் ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்கு தாரர்களாகவும் உள்ளனர்.
சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைத்து இருக்கிறோம்.
1990-களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் பன் ஐலேண்ட் அண்ட் ஓட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டு களாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறு வனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.
முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவும் செய்யக் கூடாது என்று தெரிவித்த பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்று வரை ரத்து செய்ய வில்லை.
இந்த கடிதத்திற்கு பிறகும் 2018-ல் இந்த நிலத்தை 7 லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் பன் ஐலண்ட் அண்ட் ஓட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்களாக இருந்தனர்.
கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் பல்லாவரம் தாசில்தார் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.
அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும்.
இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன்படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.
அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிகிறோம்.
இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது.
எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
- சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்:
தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. கோவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கூறினார். உடனே, இப்போது சொல்லக்கூடாது. ஆகஸ்ட் 19-ம் தேதிக்குப் பிறகு தான் அவர் துணை முதலமைச்சர் என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
- வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன்படி அவை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அவை தொடங்கியது முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு சபாநாயகர் ராஜகண்ணப்பனை கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு கீழே எச்சில் துப்புகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இணைய வாசிகள் டிசிப்ளின் கிலோ என்ன விலை?? என்றும், 40/40 வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வேலையை தொடங்கிவிட்டார்கள் என்று கமெண்டுகளையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
'நக்கல்' முதல் 'எச்சில்' வரை - தொடர் சர்ச்சையில் அமைச்சர் ராஜகண்ணப்பன்#TamilNaduAssembly #MinisterRajakannapan #videoviral #maalaimalar pic.twitter.com/elygD3xxcw
— Maalai Malar தமிழ் (@maalaimalar) June 28, 2024
- பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
- துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.
ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,
தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.
- கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
- பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.
இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.
- 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
- உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.

அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.
- ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
- டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.
இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்தில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
- முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் கமுதி வட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் விழாவை–யொட்டி மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப்பணி களை பார்வையிடுதல் மற் றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் முன்னி லையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய திட்டப்பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் பர மக்குடி வட்டம், பார்த்திப னூர் பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து கமுதி புறவழிச்சாலை ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினை பார்வை யிட்டு, நாளை (30.10.2023) பசும்பொனில் நடைபெறு கின்ற பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்க ளுக்கு பயன்பெறும் வகை யில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இந்த புறவழிச்சாலையின் மூலம் பசும்பொன்னிற்கு வரக்கூடியவர்கள் பார்த்தி பனூர் நகர் பகுதிக்குள் வராமலும் எந்த ஒரு இடையூ றுமின்றி பசும்பொன் செல் வதற்கு ஏதுவாக பயனுள்ள தாக இருக்கும் என தெரி வித்தார்.
பின்னர் அபிராமம் அருகே உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணி கள் நிழற்குடை மற்றும் பசும்பொன்னில் முதுகுளத் தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட பயணிகள் நிழற்கு டையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந் தர மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத் தார்சா லையினை பார்வையிட்ட துடன், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்திட வேண்டுமென அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ் செல்வி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசு தேவன், வட்டாட்சியர் சேது ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
- வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள்.
- முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சட்டசபையில் வினா-விடை நேரத்தில் வந்தவாசி தொகுதியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு முன் வருமா? என வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-
கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1962 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உயர்ந்துள்ளது.
சங்கத்தில் 36 வகைகளில் காதி கிராப்ட், அரசு மருத்துவமனைகள் சர்வோதய சங்கங்கள், அரசு பள்ளிகள், கல்லூரி விடுதிகள் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் வாரியத்தால் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள். இச்சங்கத்தின் பாய் வகைகள் கதர் வாரியத்தின் வழிகாட்டுதலின்படி உரிய வகையில் சந்தை படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஒரு பாய் உற்பத்தி செய்யும் சங்கம் உள்ளது. வந்தவாசியிலும் சிறுபான்மையினர் சார்பில் அதிக நபர்கள் வசிக்கிறார்கள். இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.
ஆவூர் மற்றும் வந்தவாசியில் பாய் நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சீர்காழியில் இருக்கும் பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. அதே போன்று பாய் நெசவு பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கீழ்பெண்ணாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப் பன், "ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாய் நெசவு தொழில் பொருட்கள் அரசு நிறுவனங்களுக்கு முறையாக அளிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி அல்லது ஆவூரில் பாய் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்பட்டு பாய் நெசவுப் பூங்கா அமைப்பது குறித்து இடம் வழங்கப்படுமானால் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.