என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly"

    • 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது.

    பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றபட்டு கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதிபர் மேக்ரான் வாக்கெடுப்பை வரவேற்றார். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது என்றும் அவர் கூறினார்.

    இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலியாவிற்கு பிறகு சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் 2-வது நாடாக பிரான்ஸ் மாறும். உயர்நிலைப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவும் இந்த மசோதாவில் அடங்கும்.

    • பத்து வருடங்களாக பிஆர்எஸ் எதுவுமே செய்யவில்லை
    • ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை

    தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, 

    "தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார். 

    தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

    ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசிய பாஜக தலைமை, 

    "காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு. 

    இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளது. 

    பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி என தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    கொல்கத்தா:

    மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

    மேற்கு வங்க சட்டசபையில் இந்த விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானம் ஆளும் கட்சி சார்பில் இன்று முன்மொழியப்பட்டது.

    விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என தெரிவித்தார்.

    மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாஜக கொறடா சங்கர் கோஷ் இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சபையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

    • மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல.
    • எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.

    என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.

    எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் நாளில் நான் ஆளுநரிடம் சென்று சட்டசபையைக் கலைப்பேன் என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
    • தீ விபத்தில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

    ஸ்ரீநகர்:

    ஜம்முவில் உள்ள சட்டசபை வளாகத்தில் முகப்பு அறை பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.

    தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிதிஷ் குமார் பெண்களை அவமரியாதை செய்கிறார்.
    • ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், "லாலு பிரசாத் ஊழல் புகாரில் சிக்கியபோது அவர் தனது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராப்ரி தேவி, "நிதிஷ் குமார் 'பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அவரும் பேசுகிறார். அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பாஜக தலைவர்களில் சிலரும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் கரந்தை, கோட்டை, கீழவாசல் மற்றும் மருத்துவகல்லூரி பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் பொதுமக்களிடம் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.

    • காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 5 விளக்கு அருகில் நடந்தது. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார். நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் தாமரை பாரதி, அறந்தை செல்வம், பா.கணேசன், ஓசூர் அப்துல் பாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சசிவர்ணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதாசெந்தில், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா, நகர தலைவர் சன்சுப்பையா, கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், பேராசிரியை கலாகாசிநாதன், ஹரிதாஸ், தனம்சிங்கமுத்து, திவ்யாசக்தி, பூமிநாதன், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், சொக்கலிங்கம், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் முகமதுகனி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • நான் ஒரு தாய், மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
    • எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சரோஜ் ஆஹிர் என்பவர், பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வருகை தந்துள்ளார்.

    இதுபற்றி ஆஹிர் கூறும்போது, நான் ஒரு தாய். மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை.

    நான் தற்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன் என அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் ஆஹிருக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி குழந்தை பிறந்தது. அவையில் பங்கேற்பதற்கு முன்பு,  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

    • ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும்.
    • நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்காவில் 466-வது ஆண்டு கந்தூரி விழா வருகிற 24-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நாகூர் பகுதியில் உள்ள 150 ஆட்டோ, ரிக்க்ஷா ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசும்போது:-

    ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்களை ஏற்றக்கூடாது, அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றார்.

    • உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
    • மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.

    சீர்காழி:

    சீர்காழியில் திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு.குமார், செல்ல. சேது. ர விக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இராம.இளங்கோவன், ஜி.என்.ரவி, மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், நகர செயலாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம். கல்யாணம், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினருமான நிவேதா.முருகன் பங்கேற்று, புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும், கட்சியில் புதிதாக அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    20 ஒன்றியங்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக பேராசிரியர் அன்பழகன் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், செல்வமுத்துக்குமார், விஜயேஸ்வரன், முத்து குபேரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    நிறைவில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி நன்றிக் கூறினார்.

    ×