என் மலர்
நீங்கள் தேடியது "Social Media"
- எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
- நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.
சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும்.
அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது. நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.
அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த போது 3 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- சூடானில் இருந்து கடந்த 5-ந்தேதி அல்அசார் பல்கலைக்கழகத்திற்கு சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு விமானத்தில் செல்ல பணம் இல்லாமல் தவித்தார். எனினும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக கடந்த மே மாதமே சைக்கிளில் எகிப்துக்கு பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கிருந்து மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த போது 3 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கல்வி பயில்வதற்காக சைக்கிளில் சென்றதை விளக்கியதை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்துள்ளனர். பின்னர் அவரது கல்வி ஆர்வத்தை அறிந்து சிலர் உதவிகள் செய்துள்ளனர். மேலும் நிதி திரட்டி எகிப்துக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சூடானில் இருந்து கடந்த 5-ந்தேதி அல்அசார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அவர் விரும்பிய படிப்பில் சேர அனுமதி கிடைத்ததோடு அதற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
- காதலியிடம் இருந்து பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் அமர்ந்திருந்த சவுகான் தனது காதலி வழங்கிய புரத பெட்டியை வாங்கியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
காதலர்கள் தங்கள் இணையர்களுக்கு விலை உயர்ந்த தங்க, வைர நகைகளை பரிசளிப்பதை கேள்விபட்டிருக்கிறோம். அல்லது அவர்கள் விரும்பிய பொம்மைகள் மற்றும் வித்தியாசமான பொருட்களை பரிசாக அளிப்பதை பார்க்க முடியும். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு அளித்த பரிசு பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சித்தார்த் சவுகான் என்பவரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவரது காதலி கனிகா பிஷ்ட் என்பவர் சவுகான் கார் அருகே வருகிறார். பின்னர் அவர் கையில் கொண்டு வந்திருந்த புரத சத்துக்கள் அடங்கிய பெட்டியை தனது காதலனுக்கு பரிசாக வழங்குகிறார்.
காதலியிடம் இருந்து பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் அமர்ந்திருந்த சவுகான் தனது காதலி வழங்கிய புரத பெட்டியை வாங்கியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பதிலுக்கு தனது பரிசாக அவர் காதலியின் நெற்றியில் மென்மையாக முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோ 1.32 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- கண்காட்சியில் கலைஞர்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை சிற்பம், வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
- நிர்வாண மாடல்கள் வழியாக செல்ல விரும்பாத பார்வையாளர்களுக்கு என்று தனிவழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லண்டனில் ராயல் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கலை கண்காட்சி நாளை தொடங்கி வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் புகழ்பெற்ற கலைஞர் மெரினா அப்ரமோவிச்சின் படைப்புகள் இடம்பெற உள்ளது.
இக்கண்காட்சி எல்லைகளை தாண்டி பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்கள் நிர்வாணமாக நிற்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடைவெளி வழியாக தங்களது உடல்களை திணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய கண்காட்சியின் தலைவர் ஆண்ட்ரியா டார்சியா, இந்த நடைமுறை பாலினம், பாலியல், ஆசை மற்றும் நிர்வாண தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான மோதலை ஏற்படுத்தும். இந்த கண்காட்சியில் கலைஞர்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை சிற்பம், வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிர்வாண மாடல்கள் வழியாக செல்ல விரும்பாத பார்வையாளர்களுக்கு என்று தனிவழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது சுற்றுலா பயணி ஏறி அமர்ந்துள்ளார்.
- சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார். அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த மையத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலா பயணியை கைது செய்தனர். அவர் போதையில் இருந்துள்ளார். தான் சேதப்படுத்திய சிலையின் மதிப்பு தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை அந்த சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- வீடியோவில் தேஜஸ் ஒரு ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் உணர்ச்சிகரமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரெயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு தாங்கள் வைத்திருக்கும் உணவு, தின்பண்டங்களை கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் அவ்வாறு பிஸ்கட் கொடுத்த ஒரு வாலிபருக்கு பரிசாக அவரது உருவப்படத்தை வரைந்து கொடுத்து அசத்தி உள்ளார் ஓவியர் ஒருவர்.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. தேஜஸ் என்ற அந்த ஓவியர் தனது பக்கத்தில் பகிர்ந்த அந்த வீடியோ 1.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தேஜஸ் ஒரு ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ரெயிலில் பயணித்த இளம் வாலிபர் அவருக்கு பிஸ்கட் கொடுக்கிறார். அதை பெற்றுக்கொண்ட தேஜஸ், அவருக்கு ஏதாவது பரிசளிக்க முடிவு செய்தார்.
அதன்படி தனது ஓவிய திறமையால், பிஸ்கட் கொடுத்த பவாஸ் என்ற பயணியின் உருவப்படத்தை அச்சு அசலாக வரைந்து அவரிடம் கொடுத்தார். அதைப்பார்த்த பயணி மிகவும் மகிழ்ச்சி அடைந்து தேஜசுக்கு கை கொடுத்து பாராட்டியதோடு, அந்த ஓவியத்தை நான் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன் என்றார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் உணர்ச்சிகரமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
- சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார். அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.
- சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
- நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் அத்துமீறிய காட்சிகள், காதல் ஜோடிகள் முத்தமழை பொழிந்த வீடியோ போன்றவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில எச்சரிக்கைகளை வழங்கியது. இந்நிலையில் தற்போது மும்பையில் பயணிகள் ரெயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் 'பெல்லி' நடனமாடிய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது இந்த நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்ளும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை போலீசாரை வலியுறுத்தி சில பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
- கேரள மாநிலத்தில் ஒருவர், முகநூலில் தனது மகள் விற்பனைக்கு என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை பிரிந்து சென்று மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
திருவனந்தபுரம்:
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகின்றனர். அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து வெளியிடுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
வியாபாரம் செய்து வருபவர்கள், தங்களின் தொழில் தொடர்பான விளம்பரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் அதில் பதிவிடப்படும் தகவல்கள் மக்களை வேகமாக சென்றடைகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒருவர், முகநூலில் தனது மகள் விற்பனைக்கு என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை பிரிந்து சென்று மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
அந்த நபர் தனது முதல் மனைவிக்கு பிறந்த 11-வது மதிக்கத்தக்க மகளை விற்பனைக்கு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த நபருடன் தொடர்பில் இருந்த பலர் பார்த்துள்ளனர். பெற்ற மகளை விற்பனைக்கு இருக்கிறார் என்று அந்த நபர் வெளியிட்டிருந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களில் சிலர் அதுபற்றி போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த பதிவு முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. முதல் மனைவியுடன் நிலவி வந்த பிரச்சனை காரணமாக மகள் விற்பனைக்கு என்று அந்த நபர் விளம்பரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் குமார்நகரை அடுத்த வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 36). தையல் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). நண்பர்களான இருவரும் மதியம் முதல் திருப்பூர் காந்திநகர் அருகே மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் இரவு இருவரும் டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது பாண்டியன் காளிமுத்துவை பார்த்து "பல் இல்லாத உனக்கு எதற்கு பொண்டாட்டி" என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த காளிமுத்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து உனக்கு பல் இருப்பதால் தானே இப்படி பேசுகிறாய் உன் பல் அனைத்தையும் உடைத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு பாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். பாண்டியன் கீழே தரையில் படுத்திருந்த நிலையில் காளிமுத்து உருட்டு கட்டையால் தொடர்ந்து பாண்டியன் முகத்தில் ஓங்கி அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியனின் 5 பற்கள் உடைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காளிமுத்துவை தடுத்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளிமுத்துவை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.