search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gen z"

    • 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA ஆவர்.
    • இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது.

    2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது.

     

    வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

    பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

    தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள். 

    • 2000 வாக்காளர்களிடம் டிரம்ப் மற்றும் பைடன் குறித்து கேட்கப்பட்டது
    • ஜென் இசட், டிரம்ப் முன்னர் அதிபராக இருந்த போது வாக்களிக்கும் வயதையே எட்டவில்லை

    வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் 46-வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இரு-கட்சி அரசியல் நிலவும் அந்நாட்டில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் (77) டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

    தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க பல கருத்து கணிப்புகளிலும், தகவல் சேகரிப்பிலும், பத்திரிகைகளும் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் "சென்டர் ஃபார் அமெரிக்கன் பொலிடிகல் ஸ்டடீஸ்" (CAPS) எனும் அமைப்பு வேறு சில அமைப்புகளுடன் இணைந்து கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 2000 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் குறித்தும் கேட்கப்பட்டது.


    இதில் 57 சதவீத ஜென் இசட் வாக்காளர்கள், குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக விரும்புவதாகவும் 41 சதவீதம் பேர் அவரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால், "ஜென் இசட்" (Gen Z) எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக வருவதை ஆதரித்தனர்.

    2017 முதல் 2021 வரை அதிபராக டிரம்ப் இருந்த போது, இவர்கள் வாக்களிக்கும் வயது நிரம்பாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் வயதினரின் வாக்குவங்கி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் அதிபராக முயன்று வரும் ஜோ பைடனுக்கு சாதகமான தகவல் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    மேலும், ஜென் இசட் வயதினருக்கு அடுத்து 55 வயதிலிருந்து 64 வயது வரை உள்ளவர்களும் (60 சதவீதம்), 25 வயதிலிருந்து 34 வயது உள்ளவர்களும் (58 சதவீதம்) மற்றும் 35 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்களும் (58 சதவீதம்) டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    • 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர் பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர்
    • ஜென் இசட்டிடம் ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது என்றார் ஜோடி

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உருவெடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர், ஹாலிவுட் நடிகை ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster).

    தற்போது 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்தார்.

    தனது நடிப்பிற்காக இரண்டு முறை உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்றவர், ஜோடி ஃபாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீண்ட காலமாக ஹாலிவுட்டில் செயலாற்றி வரும் ஜோடி ஃபாஸ்டர், தற்போதைய ஜென் இசட் (Gen Z) எனப்படும் 90களின் பிற்பகுதியிலிருந்து 2000 முற்பகுதி வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    "ஜென் இசட் இளைஞர்களுடன் பணியாற்றுவது பல நேரங்களில் பெரிய தொந்தரவாக உள்ளது. நேரம் காப்பதில் அவர்களுக்கு ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது. போட்ட திட்டப்படி பணியாற்ற வர வேண்டிய நேரத்திற்கு வராமல் அலட்சியமாக காரணம் சொல்கின்றனர். அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஏகப்பட்ட தவறுகள் இருக்கின்றன. அனுப்பும் முன்பாக சரிபார்க்கவில்லையா என கேட்டால், அதை காலவிரயம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நாங்கள் வளர்ந்து போது எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. திரைப்படத்துறையில் கலைஞர்களாக வர விரும்பும் தற்கால இளைஞர்கள் தங்களின் சொந்த படைப்புகளையே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்" என ஜோடி தெரிவித்தார்.

    ×