என் மலர்
உலகம்

90ஸ் Kids-ஐ விட அறிவாற்றலில் பின்தங்கும் GEN Z தலைமுறையினர்.. காரணம் என்ன? - ஆய்வில் தகவல்
- கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்றுள்ளது.
- பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மழுங்கடிக்கிறது.
80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட 1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் மற்றும் IQ குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் IQ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்று, IQ அளவுகள் குறையத் தொடங்கியுள்ளது.
புத்தகங்கள் வாசிப்பதை ஜென் Z தலைமுறையினர் பெருமளவு தவிர்த்துவிட்டு, அதிக நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
நீண்ட கட்டுரைகளையோ அல்லது புத்தகங்களையோ வாசிக்காமல் சுருக்கமான தகவல்களையும் வீடியோக்களையும் பார்ப்பது ஆழமாகச் சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. இதனால் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல்போகிறது.
அதிகப்படியான சமூக ஊடக பயன்பாடு, கவனச்சிதறலை அதிகரித்து, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மழுங்கடிக்கிறது.
தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்திருந்தாலும், அது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவாமல், அனைத்தையும் மேலோட்டமாகப் பார்க்கும் தன்மையை உருவாக்கியுள்ளது. இதுவே இந்தத் தலைமுறையின் அறிவுத்திறன் பாதிப்பிற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அறிவுத்திறன் மட்டுமின்றி ஜென் Z தலைமுறையினர் பழக்க வழக்கங்களிலும் மில்லினியல்களை விட மாறுபட்டுள்ளது.
அதேநேரம், முந்தைய தலைமுறையில் 72 சதவீதமாக இருந்த மதுப்பழக்கத்தின் மீதான ஆர்வம் ஜென் Z இடையே 62 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.






