என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madagascar"

    • ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
    • பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது. 16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் அபதிர் Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் அதிபர் காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

    • தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக Gen-Z போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z போராட்டத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இது போன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று கூறினார்.
    • இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தீவு நாடான மடகாஸ்கரில் தலைநகர் அன்டனநாரிவோவில் இருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது.

    இங்கு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற வழக்கில், குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் (castration) செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் நடிடியர் ரசாபின்ட்ரலாம்போ, "இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், கடுமையான வேலைகளுடன் ஆண்மை நீக்க தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை" என்று கூறினார்.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வழக்குகளுக்கு 2024 இல் மடகாஸ்கரில் இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மனித உரிமை அமைப்புகள் இந்த இரு நடைமுறைகளையும் விமர்சித்துள்ளன.  

    • இந்திய தூதரக கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு.
    • இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

     அண்டனானரிவோ:

    இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா இன்று வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டி சென்று இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  


    மேலும், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய தேசிய கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திய தூதர் அபய் குமார், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×