search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bicycles"

    • ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்டளை சார்பில்அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    • 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குளத்திரன்பட்டு ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்ட ளை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் மற்றும் 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளையின் தலைவரும் தொழில் அதிபருமான கரிகாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளரும் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளருமான கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரதநாட்டியம், யோகா, சிலம்பம் மற்றும் கராத்தே போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா சைக்கிள் மற்றும் சீருடை கல்வி உபகரணங்களை வழங்கி பேசியதாவது:-

    கல்வியே சமூக மாற்றத்திற்கு சிறந்த கருவி. இது போன்ற கல்வி பணிகளை இந்த அறக்கட்டளை தொடர்ந்து செய்து வரும். இப்பகுதி மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், ரவி , பல்லவராயர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன்

    பிரபல பட்டிமன்ற நடுவரும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பொருளாதார பேராசிரியருமான தங்க ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன், அன்புக் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், தலைமை ஆசிரியர் மற்றும் கிராம பொதுமக்கள் மாணவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
    • பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் அகமது நெய்னார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உசேன் வரவேற்றார்.

    அபிராமம் மற்றும் நத்தம் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.

    • கருமாத்தூரில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் வரவேற்றார்.

    விழாவில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் வழங்கினர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி நன்றி கூறினார். ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரிலுள்ள பி.ஏ.சி.எம் மேல்நிலைப் பள்ளி பி.ஏ.சி.ஆர் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டராஜா அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சிவக்குமாரி, காளி யப்பன் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

    பின்னர் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சர் மாணவ மாண விகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டங்கள் அனைத்தையும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைந்து பள்ளிக்கும் ராஜபாளையம் தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து ராஜ பாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் மேசை, பெஞ்சுகளை எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஏ.ஷாஜகான் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர ரேணுகா வர–வேற்றார்.

    விழாவல் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக் கப்பட்ட தொகுதியாக இருந் தது. இப்போது வளர்ச்சி யடைந்த தொகுதியாக மாறி வருகிறது. அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் தீட்டி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். முதுகுளத்தூர் தொகுதியில் பைபாஸ் வேலை முடுக்கிவிடப்பட் டுள்ளன.

    கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும். முதுகு ளத்தூர் அமைதியான நகர மாக திகழ்கிறது. இங்கு சாலைப்பணிகள் முடுக்கி விடப்பட்ருள்ளன. இங்கு மதரீதியாகவோ, சாதி ரீதி யாகவோ பாகுபாடு கிடை யாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.

    அடுத்தகட்ட பணியாக இமானுவேல் சேகரனுக்கு செல்லுரர் கிராமத்தில் சிலை, முதுகுளத்தூரில் தேவர் மஹால், அழகுமுத் துக்கோன் சிலை, கட்டப் பொம்மனுக்கு சிலை, ஏர்வாடியில் இஸ்லாமியருக்கு மஹால், காமராஜருக்கு சிலை ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய குமார், தாளாளர் செய்யது மூமின், ஜமாத் தலைவர் காதர்முகைதீன், முகம்மது யாக்கோப், சாகுல்ஹம்து, பைசல் முகம்மது உள்பட மரணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவு தீன் நன்றி கூறினார்.

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
    • மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசுமேல் நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை யாசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேட பட்டி மணிமாறன் கலந்து கொண்டு 79 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், அரசு பள்ளியில் படிக்கும் நீங்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.

    இந்த மேல்நிலைப் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் எடுத்துரைத்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், நகராட்சி கவுன்சி லர்கள் சின்னசாமி, வீரக்கு மார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், பெல்ட்முருகன், ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், ஜெய்லானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், பள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், அரசு ஒப்பந்ததாரர் சண் சரவணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 -23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்விப்பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில், சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும், விடும் நேரங்களில் அதிவேகமாகவும், அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும் ஓட்டி செல்கின்றனர்.

    இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சாலையில் நடந்தும், சைக்கிள்களில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், போலீசார் மோகனூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 16 மற்றும் 17 வயது நிரம்பிய 4 சிறுவர்களை பிடித்து அவர்கள் ஓட்டி வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் என்பதை எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • திருவேங்கைவாசல் ஊராட்சியில் சொந்த நிதியில் 6 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் வழங்கினார்
    • மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் ஊராட்சியை சேர்ந்த வளையன்வயல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேருக்கு சைக்கிள்களை தனது சொந்த நிதியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களுக்கு சென்றார். அப்போது, வளையன்வயல் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் வடமலாப்பூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கும், வீட்டுக்கும் செல்கிறோம்.

    பத்தாம் வகுப்பு என்பதால் நடந்து சென்று படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, சைக்கிள் வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டாக்டர் சி.விஜயபாஸ்கர், பள்ளி சென்று படிக்க ஏதுவாக பத்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களூக்கு தனது சொந்த நிதியிலிருந்து சி.வி.பி. பவுண்டேசன் மூலமாக 6 சைக்கிள்களை வழங்கினார். மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி (வயது 50). இவர் நேற்று திருச்சி ரோடு, சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரிய சாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர், லேசான காயங்க ளுடன் தப்பி னார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம்புதூர் ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 63).

    இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×