search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government school students"

    • அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
    • விழாவில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலா ளருமான உதயநிதிஸ்டாலின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

    மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, மாநகர பொருளாளர் காளையார் சரவணன், கவுன்சிலர்கள் உஷா, அண்ணா.பிரகாஷ், லெனின். இளைஞரணி வாசிம்ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.
    • விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களின் விபரங்களை தொகுக்கும் வகையில், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும். எமிஸ் புள்ளி விபர அடிப்படையில் தான் ஆசிரியர் காலியிடம் கணக்கிடுதல், மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் கொள்முதல் செய்வது, புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

    வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும் போது ஆகஸ்டு மாதம் இறுதி வரை அட்மிஷன் நடப்பதால், அவ்வப்போது புதிதாக சேரும் மாணவர் விபரங்கள் உள்ளீடு செய்யப்படும். தற்போது விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாணவரின் சுயவிபரங்கள் அனைத்தும், சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், எமிஸ் இணையதளத்தில் சர்வர் குளறுபடியால், உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.மாதந்தோறும் இப்பணிகள் மேற்கொள்வதால், கற்பித்தலில் ஈடுபட முடியாத சூழல் நீடிக்கிறது. தொழில்நுட்ப குளறுபடிகளை சரிசெய்துவிட்டு, அப்டேட் பணிகள் மேற்கொண்டால் மட்டுமே இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றனர். 

    • வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.
    • இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாழப்பாடியில் நடைபெற்ற வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.

    எட்டாம் வகுப்பு மாணவர் இ. தோர்னேஷ் மூன்றாமிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு செ. சூரியா மூன்றாமிடமும், 14-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மு.தீபிகா முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் பெ.மணிகண்டனையும், பள்ளி தலைமையாசிரியர் கு. வெங்கடாசலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், பள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், அரசு ஒப்பந்ததாரர் சண் சரவணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் பவானிசாகர் சாலை வழியாக சென்றது. இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    தமிழ்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கு மற்றும் தாய்மார்களின் நல் வாழ்வி ற்கும் குழந்தைகளின் ஒளி மயமான எதிர்கா லத்திற்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது முதல் குழந்தையை தாம தப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள் எடுத்துரைக்கப் பட்டன.

    மக்கள் தொகை பெருக்க த்தினால் ஏற்படும் தாக்க த்தை குறைத்தல், சுற்று ச்சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்கு வித்தல், வறுமை ஒழிப்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறப்பட்டது.

    குடும்பத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணி த்துக் கொள்வேன் என உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவ- மாணவிகள் ஏற்றனர்.

    மேலும் என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றி யடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என சுதந்திர அமுத பெரு விழாவினை கொண்டாடி மகிழ்வோம் மற்றும் குடும்ப நல உறுதிமொழி ஏற்று வளம் பெறுவோம் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஊர்வ லமாக சென்று பள்ளியை வந்து அடைந்தனர்.

    • கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவதால் விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில் மருத்துவ கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றிருந்தும் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் சூழ்நிலை உள்ளது.

    சென்டாக் மருத்துவக் கவுன்சிலில் மொத்தமுள்ள 389 அரசின் மருத்துவ இடங்களில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளியில் படித்த சுமார் 28 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சந்திப்பின் போது மாநில அவை தலைவர் அன்பானந்தம்,மாநில இணைச் செயலாளரும் . முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார் , மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுவை சலூன் கடைக்காரருக்கு குவியும் பாராட்டு
    • புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    கால மாற்றத்திற்கேற்ப தொழில்களிலும் நவீன மாற்றங்கள் உருவாகி வருகிறது.

    இதில் சலூன் கடைகளும் தப்பவில்லை. கிராமங்களில் மரத்தடியிலும், புறநகர் பகுதிகளில் சிறிய கடைகளிலும் இருந்த முடி திருத்தகங்கள் இன்று நவீனமயமாகியுள்ளது. நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றன.

    இந்த கடைகளில் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை முடி திருத்தம், முகம் அழகுபடுத்துதல், தாடியை அழகுபடுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது.

    தற்போதைய இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தோடு உலா வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் முடி திருத்தம் செய்ய ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கிறார். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணத்தில் முடி திருத்தம் செய்கிறார்.

    தினமும் காலையில் 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் இந்த சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார். அதன்பிறகு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான பணியை தொடங்குகிறார். புதுவையில் ஒரு சில தினங்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் இந்த கடையை பற்றி தெரிந்த பெற்றோர், மாணவர்களோடு காலையிலேயே இங்கு வந்து விடுகின்றனர்.

    ரூ.10-க்கு டீ குடிக்கக்கூட முடியாத நிலையில் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக முடிதிருத்தம் செய்யும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது, ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வது தனக்கு திருப்தியளிக்கிறது. தானும் அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகையை அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

    • புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1978-1982 ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், முன்னிலை வகுத்தார். முன்னால் தலைமையாசியர். அரிகரன், தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்செல்வி வரவேற்றார். இப்பள்ளியில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான குறும்படத்துடன் கூடிய நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    அதில் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைத்து அனைவரும் கண்கலங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பண்ருட்டியிலிருந்த வந்த முன்னாள் மாணவர் வெங்கடேசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 100 பலாபழங்களை பரிசாக வழங்கினார். தொடந்து ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் அருசுவை உணவு அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் சார்பாக இப்பள்ளியில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியினை பி.எஸ்.என்.எல் உதவி பொறியாளர் அரிதாஸ் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள், காமராஜ், தேவநாதன். சவுந்தராஜன், ரவி, இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

    • பா.ஜனதா வலியுறுத்தல்
    • கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்து அதில் தோல்வியடைந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றியடைய கல்வித் துறை மீண்டும் தேர்வுகள் நடத்துகிறது.

    ஆனால் ஆசிரியர்கள் வழிகாட்டு தலின்றி மாணவர்களால் தேர்வு எழுதி வெற்றி அடைவது என்பது மிகவும் கடினம். எனவே அரசு பள்ளியில் ேதால்வி அடைந்த மாணவர்கள் தேர்வு எழுத தயாராக தனியார் கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த கட்டணத்தை செலுத்த முடியாத பல மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே புதுவை அரசு தோல்வி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அதே பள்ளியில் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களை ஆசிரியர்கள் மாடியில் ஏறி மழைத்தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி இருக்கும் இலை தழைகளை சுத்தம் செய்யச் சொன்னார்கள்.
    • மாணவர்கள் அரசு பள்ளி கட்டிடத்தின் மாடியில், தாவி விளையாடி சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை யில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பச்சமலையான்கோட்டை, கேத்தையகவுண்டன்பட்டி உட்பட இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சில பள்ளிகள் சுத்தம் செய்யப்படாமல் செயல்பட தொடங்கியது. இதேபோல், செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட மாடியில் மழை நீர் மற்றும் மர இலைகள் தேங்கி மாடியில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

    மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் மாடியில் ஏறச் சொல்லி, மழைத்தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி இருக்கும் இலை தழைகளை சுத்தம் செய்யச் சொன்னார்கள்.

    ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு மாணவர்கள், மாடியில் ஏறி இலைகளை கூட்டி சுத்தம் செய்தனர். அப்போது, சில மாணவர்கள் ஆபத்தான முறையில், பள்ளி மாடி கட்டிடத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடினர். சில மாணவர்கள் மாடி கைபிடி சுவரில் ஏறி விளையாடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் செல்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களின் இந்த செயலுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    மாணவர்கள் அரசு பள்ளி கட்டிடத்தின் மாடியில், தாவி விளையாடி சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும்.

    அவர்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். இதில் மாற்றம் இருக்காது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×