search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court Chief"

    • சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.
    • தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் பள்ளிக்கு திடீரென வந்திருந்தார்.

    அவரை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆசிரி யர்கள் வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்குள் சென்ற சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.

    தான் படித்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நன்றாக படித்து தன்னை போல் ஒரு உயரிய பதவிக்கு வர வேண்டும் என மாணவர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    பின்னர் அவர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் பள்ளியின் நலன் கருதி பள்ளிக்கு தேவையான வசதிகள். அதனை இந்த பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பள்ளிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செய்ய லாம் என்பது குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    பின்னர் பள்ளி வளாக த்திற்குள் சென்று பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்ட காய்கறி செடிகள் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அதே போல் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மின் கம்பங்களால் மாணவர்க ளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகே ந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×