அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் வழங்கி தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் வழங்கி தொடங்கி வைத்தார்.
Published on

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், பள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், அரசு ஒப்பந்ததாரர் சண் சரவணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com