search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of motorcycles"

    • வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில், சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும், விடும் நேரங்களில் அதிவேகமாகவும், அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும் ஓட்டி செல்கின்றனர்.

    இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சாலையில் நடந்தும், சைக்கிள்களில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செல்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், போலீசார் மோகனூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 16 மற்றும் 17 வயது நிரம்பிய 4 சிறுவர்களை பிடித்து அவர்கள் ஓட்டி வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும், சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் என்பதை எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ×