கருமாத்தூரில் அரசின் விலையில்லா சைக்கிள்கள்

கருமாத்தூரில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கருமாத்தூரில்  அரசின் விலையில்லா சைக்கிள்கள்
Published on

மதுரை

மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் வரவேற்றார்.

விழாவில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் வழங்கினர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி நன்றி கூறினார். ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com