என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள்"
- கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக்குகள் எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
- பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பொதுமக்களிடம் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தல கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட கப்புகள், மணலில் புதைந்து கிடக்கும் பொருட்களை கண்டுபிடித்து எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
முன்னதாக காரைக்குடி 9 வது பட்டாலியன் மகேஷ் நீர்நிலைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவிகளை போலீசார் வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
- நோக்கம் குறித்து கேட்டறிந்து சாக்லேட், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.
சீர்காழி:
இளம் வயதில் தவறான, தீய வழிகளில் கவனம் செலுத்தாமல், படிப்பு மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி அதில் ஈடுபாடுடன் சிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கில் சீர்காழி சட்டநாதபுரத்தில் காவல்துறை சார்பில் சிறுவர், சிறுமிகள் மன்றம் தொடங்கப்பட்டு அதில் கேரம்போர்டு, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள், சாரணர் ஆசிரியரை கொண்டு கற்றுதரப்படுகிறது. சுமார் 48 மாணவ-மாணவியர் பயின்று வரும் நிலையில் இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் மாணவ-மாண விகளுடன் கலந்துரையாடி லட்சியத்துடன் கல்வி பயின்று அதனை நோக்கி நாம் தினந்தோறும் முன்னேறி செல்லவேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நோக்கம் குறித்து கேட்டறிந்து சாக்லேட், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் மாணவ -மா ணவிகளை காவல்துறையின் வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிபிரிவு காவலர் மூர்த்தி உடனிருந்தனர்.
- உடல் முழுவதும் தீப விளக்கேற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
- முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையம் சார்பில் பள்ளி மாணவர்கள் பாத விருச்சிகாசனம், விளக்கா சனம் முறையில் யோகா சனம் செய்து உடல் முழுவ தும் விளக்குகளை ஏற்றி கார்த்திகை தீபத்திருநாளை நடத்தி சாதனை படைத்தனர்.
எட்டாம் வகுப்பு மா ணவர் நரேஷ், ஆறாம் வகுப்பு மாணவர்கள் ரசூல் மற்றும் அன்பரசன் ஆகி யோர் உடல் முழுவதும் ஆச னம் செய்து விளக்கு களை ஏற்றி சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பயிற்சி ஆசிரியர் நீராத்தி லிங்கம் தலைமையில் முத்து வேல், வீர சோழ திருமாவ ளவன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் உட்பட முக் கிய பிரமுகர்கள் பங்கேற்று சாதனையை பாராட்டினர்.
- கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
- பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.
- உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய வார தொடர் நிகழ்வுகளின் நிறைவாக இன்று இந்திய சுற்றுலாவுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நடைபெற்ற பாரம்பரிய சுற்றுலா நிகழ்வினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
இந்த சுற்றுலாவில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், இன்டாக் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு பெற்ற இடங்களான திருப்பா லைத்துறை நெற்களஞ்சியம், திருப்புள்ளமங்கை கோவில், திருவையாறு காவிரி படித்துறை, திரிச்சினம்பூண்டி கோவில், ஒரத்தநாடு முத்தாம்பால் சத்திரம், மனோஜிபட்டி உப்பரிகை, ராஜா கோரி கைலாஷ் மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.
இந்த பாரம்பரிய சுற்றுலாவினை வரலாற்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ், தொல்லியல் பாதுகாவலர் முனைவர் பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் வழி நடத்தினர்.
- கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
- முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
மன்னார்குடி:
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராசுப்பிள்ளை, நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை இலக்கிய படைப்பிதழான 'விளையும் பயிர்' கையெழுத்து ஏட்டினை திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இந்திரா பாண்டியன் வெளியிட அதனை மேனாள் தலைமை யாசிரியர் தவமணி சந்திரன் பெற்றுக்கொண்டார்.
சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையர் மீனாட்சி உள்ளிட்ட அனைவரும் குத்து விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர். பின், பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
முன்னதாக பாரதியார் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் முதுகலை தமிழாசிரியர் ராச கணேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இணை செயலாளர் சுகந்தி இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
முடிவில் இணை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
- நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பா ளர் கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார்.
இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி தென்காசியில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி, நேரு உயர்நிலைப் பள்ளி, பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜான்சன் உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகங்கள், பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி யன், முகமது அப்துல் ரஹிம், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர் செயலாளர்கள், மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ரஹிம் செய்திருந்தார்.
- மன்னார்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடை பெற்றது.
- தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் மன்னார் குடியில் உள்ள பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ் தலைமை தாங்கினார்.
மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் இன்பவேணி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர்.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சத்யா (நீடாமங்கலம்), அனுப்பிரியா (திருத்துறைப்பூண்டி) மற்றும் ஆசிரிய பயின்றுனர்கள் கலந்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரிய பயின்றுனர் காளிமுத்து நன்றி கூறினார்.
- பள்ளி ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு தனிதேர்வு வைக்க வேண்டும்.
- புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுசெயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி யினுடைய உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.
உடற்கல்வி இயக்குனர்கள் சம்பந்தம் ,செல்வ கணேசன், எஸ்.ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் டி.ஆர்.செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் சிறப்புரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என தேர்வு தனியாக வைக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்புகுதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணி அளிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் 200 உடற்கல்வி துறை ஆசிரியர்களை புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.
ஏற்பா டுகளை திருவெண்காடு சு.சு.தி ஆண்கள் பள்ளியினுடைய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செல்லதுரை செய்திருந்தார்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
- மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
- 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
பின்னர், மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் மாணவர் அருண் கூறுகையில்:-
ஒரே பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறோம்.
அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றார்.