என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போகிக்கும் விடுமுறை... பொங்கலை ஒட்டி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக் கல்வித்துறை!
    X

    போகிக்கும் விடுமுறை... பொங்கலை ஒட்டி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக் கல்வித்துறை!

    போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3 நாட்கள் விடுமுறையும், சனி, ஞாயிறு விடுமுறைகளான 2 நாட்களையும் சேர்த்து, தற்போது பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் விடுமுறை அளிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    Next Story
    ×