என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விடுமுறை"
- ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
- விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சென்னை:
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. வருகிற 7-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் கிடைத்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, மீறினால் அந்த பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல், ராசிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருவதாகவும் இதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு பாட வேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கல்வித் துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்தால், விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
- காட்கோபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இன்று மாலை முதல் மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களில் அதி கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று [செப்டம்பர் 26] விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நகரின் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
Waterlogging on Andheri Kurla Road. Avoid. #MumbaiRains pic.twitter.com/8aaOWyZhnc
— Sheetal ✍ शीतल ✍ شیتل (@ssoniisshh1) September 25, 2024
சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தும் கனமழையால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள காட்கோபர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Ghatkopar Metro station right now. There's a chance of stampede as there's too much crowd. Avoid taking any mode of public transport right now. Today Mumbai is fucked up badly. #MumbaiMetro #Mumbairains pic.twitter.com/lJFvKujbrX
— Prasad Rajguru (@PrasadRajguru1) September 25, 2024
- கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 23-ந் தேதி முகூர்த்தம், 24-ந் தேதி சனிக்கிழமை, 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26-ந் தேதியன்று கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 23, 24-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை மறுநாள் 23-ந் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 24-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 485 பஸ்களும், மற்றும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26ம் தேதி திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23-ந் தேதி மற்றும் 24-ந் தேதியன்று 70 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், திங்கட்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளா மாநிலத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகி உள்ளார்.
மழை பாதிப்பு காரணமாக 224 பேர் மீட்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 97 வீடுகள் சேதமுற்றும், ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
தொடர் கனமழை காரணமாக ஆலப்புழா, இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கண்ணூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மாவட்டம் முழுவதும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறியுள்ளார்.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
- பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.
பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.
- பவுர்ணமி என்பதால் நேற்று பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம்.
- வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை)விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் நேற்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனால் நேற்றை விட இன்று கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்ட போதிலும் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
- அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.
- இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
சிக்கன் - 100 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
வினிகர் - 1ஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
வெங்காய தாள் - சிறிதளவு
செய்முறை:
• 100 கிராம் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
• வேகவைத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
• 1/2 கப் ஸ்வீட் கார்னில் பாதி அளவை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.
• பின்னர் வெங்காய தாளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.
• இதனுடன் அரைத்து வைத்திருந்த ஸ்வீட் கார்ன், சிறிதாக பிய்த்து வைத்திருந்த சிக்கன், 3 டம்பளர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
• நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்திருந்த கார்ன் ஃப்ளார் மாவு கரைசலை ஊற்றவும்.
• இதனுடன் மீதம் உள்ள ஸ்வீர் கார்னையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு 5 நிமிடம் இவை அனைத்தையும் கொதிக்க விடவும்.
• இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
• இப்போ சுவையான விடுமுறையில் சூடாக சாப்பிட சுவீட் கார்ன் சிக்கன் சூப் ரெடி.
- ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்று மாலை திடீரென நுழைந்தது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து திருப்பத்தூர் நகர பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்