search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holiday"

    • குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது.
    • பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    பந்தலூர், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதிர்காடு, பாட்டவயல், கரியசோலை, சேரம்பாடி, எருமாடு உள்பட தாலுக்கா பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

    இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்

    நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

    • கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளா மாநிலத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகி உள்ளார்.

    மழை பாதிப்பு காரணமாக 224 பேர் மீட்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 97 வீடுகள் சேதமுற்றும், ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தொடர் கனமழை காரணமாக ஆலப்புழா, இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கண்ணூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    • ராய்காட் மற்றும் நவி மும்பையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் பெய்து வரும் கனமழையால் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று அதிகாலை 1 மணி முதல் பலத்த மழை பெய்தது. விடிய விடிய மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை காரணமாக மும்பையில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. குறிப்பாக மும்பை கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

    இந்நிலையில் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக புனே, மும்பையில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்காட் மற்றும் நவி மும்பையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பெய்து வரும் கனமழையால் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், மழை தொடர்ந்து பெய்வதாலும் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் சில இடங்களில் ஜூலை 12 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம்

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.

    அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் 100 கட்டணம் மற்றும் இலவச தரிசனம் வரிசையில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்த வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    தற்போது கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் அமருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாததினால் பக்தர்கள் தரிசன வரிசை பகுதியில் மற்றும் நடைபாதைகளில் அமர்ந்திருந்து ஓய்வு எடுத்தனர்.

    • கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஊட்டி அருகே அத்திக்கல், புது தோட்டம், மஞ்சனக்கொரை, எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாவரவியல் பூங்கா அருகே ராஜ்பவன் மாளிகை சாலையிலும் மரம் விழுந்தது.

    கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இருவயல் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு ஆங்காங்கே மின் வினியோகமும் தடைபட்டது. குறிப்பாக கூடலூர், பந்தலூரில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தாலுகா பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.

    • பவுர்ணமி என்பதால் நேற்று பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம்.
    • வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை)விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் நேற்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனால் நேற்றை விட இன்று கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்ட போதிலும் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    • அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.
    • இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட் கார்ன் - 1/2 கப்

    சிக்கன் - 100 கிராம்

    கார்ன்ஃப்ளார் மாவு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முட்டை - 1

    வினிகர் - 1ஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    வெங்காய தாள் - சிறிதளவு

     செய்முறை:

    • 100 கிராம் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    • வேகவைத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    • 1/2 கப் ஸ்வீட் கார்னில் பாதி அளவை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • அடுப்பில் வாணலியை வைத்து முட்டையை நன்கு அடித்து ஊற்றவும்.

    • பின்னர் வெங்காய தாளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.

    • இதனுடன் அரைத்து வைத்திருந்த ஸ்வீட் கார்ன், சிறிதாக பிய்த்து வைத்திருந்த சிக்கன், 3 டம்பளர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    • நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்திருந்த கார்ன் ஃப்ளார் மாவு கரைசலை ஊற்றவும்.

    • இதனுடன் மீதம் உள்ள ஸ்வீர் கார்னையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு 5 நிமிடம் இவை அனைத்தையும் கொதிக்க விடவும்.

    • இறுதியாக வினிகர், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    • இப்போ சுவையான விடுமுறையில் சூடாக சாப்பிட சுவீட் கார்ன் சிக்கன் சூப் ரெடி.

    • ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்று மாலை திடீரென நுழைந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து திருப்பத்தூர் நகர பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    • வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
    • புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.

    அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.

    புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.

    அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.

    புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

    தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    • பொது விடுமுறை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிம்னறத்திற்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    ×