என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுத பூஜை"
- நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.
விஜயின் பிரச்சாரப் பேருந்து, பிரச்சார வேன் உள்ளிட்டவற்றிற்கு ஆயுத பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டுள்ளது. விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர்.
- திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.
மகாபாரதத்தில் துரியோதனன், தன் தாய்மாமன் சகுனியைக் கொண்டு சூழ்ச்சி செய்து, பஞ்சபாண்டவர்களை சூதாட்டத்தில் வென்றான். இதனால் பாண்டவர்கள் ஐவரும், பன்னிரெண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞான வாசமும் செல்லும்படி நேர்ந் தது. காட்டில் 12 வருடத்தை கழித்த பாண்டவர்கள், 13-வது வருடத்தை துரியோதனிடம் செய்த ஒப்பந்தப்படி, தலைமறைவாக வாழத் திட்டமிட்டனர்.
யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர். எனவே அவர்களை, உருவத்தை மாற்றிக்கொண்டு, மத்ஸ்ய தேசத்தின் அதிபதியான விராட மகாராஜாவிடம் பணியாற்றும்படி, தவும்ய மகரிஷி அனுப்பி வைத்தார். அதன்படி தருமன், கங்கன் என்ற பெயரில் சகுன - தர்ம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாக உருமாறினான். பீமன் தனது சமையல் திறமையால், வல்லபன் என்ற பெயரில் சமையல்காரன் ஆனான். அர்ச்சுனன், ஏற்கனவே ஊர்வசியிடம் பெற்றிருந்த சாபத்தின்படி பிருஹன்னனை என்ற திருநங்கையாக மாறினான். நகுலன், தாமக்ரந்தி என்ற பெயரில் குதிரை பராமரிப்பாளனாகவும், சகாதேவன், தந்திரி பாலன் என்ற பெயரில் பசுக்களை காப்பவனாகவும் பொறுப்பேற்றனர். திரவுபதி, சைந்திரி என்ற பெயரில் ராணியின் வேலைக்காரியாக சேர்ந்தாள்.
இப்படி பாண்டவர்கள் விராட மன்னனின் அரண்மனையில் 10 மாதங்கள் தலைமறைவாக இருந்தனர். 'பாண்டவர்கள் இருக்கும் இடம் செழிப்பாக இருக்கும்' என்று பீஷ்மர் சொன்ன தகவலை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை தேடச் சொன்னான் துரியோதனன். ஒற்றர்களும், விராட தேசம் மிகவும் செழிப்பாக இருப்பதாக வந்து சொன்னார்கள். பாண்டவர்கள் அங்குதான் இருக்க வேண்டும் என்று கருதிய துரியோதனன், திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மாவை, விராட நகரத்தை ஒரு புறத்தில் இருந்து தாக்கும்படி உத்தரவிட்டான். மற்றொரு புறத்தில் இருந்து கவுரவர்கள் படை தாக்கும் என்றும் கூறினான்.
அப்படி விராட நகரத்தை தாக்கிய சுசர்மாவை எதிர்ப்பதற்காக, தருமர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் சென்றார் விராட மன்னன். அவர்கள் அந்தப் படையை விரட்டி அடித்தனர். துரியோதனன் முதலானவர்கள் விராட நகரத்தின் வடக்கு பக்கத்தில் இருந்து போரிட வந்தனர். அவர்களை எதிர்க்க விராட மன்னனின் மகன் உத்தரம் படையெடுத்துச் சென்றான்.
அப்போது திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.
துரியோதனனின் படையைக் கண்டு உத்தரன் பயந்து ஓட முயன்றான். ஆனால் அவனைத் தடுத்த அர்ச்சுனன், நீ தேரை செலுத்து, நான் அவர்களோடு யுத்தம் செய்கிறேன்' என்றான். பின்னர் அங்கிருந்த வன்னி மரத்தின் அருகே சென்று, மரத்தின் அடியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வந்து துரியோதன படையுடன் போரிட்டு வெற்றி யும் பெற்றான், அர்ச்சுனன். அந்த தினம் 'ஆயுத பூஜை' என்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ஆயுதங்கள், நாம் வேலை செய்வதற்கான கருவிகளை பூஜிப்பது நன்மை தரும். மறுநாள் விஜயதசமி அன்று வன்னி மரத்தை பூஜிப்பதும், விஷ்ணு பகவானை தியானிப்பதும், லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். மேலும் பெருமாள் கோவில்களில் வன்னி மரத்தில் பானம் போடும் நிகழ்வு நடக்கும்.
விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியாக முடியும் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் ஒருசேர வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். அன்னை, மகிஷாசுரன் என்ற தீமையை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதை போன்று, நம் மனதில் உள்ள கோபம், தீய எண்ணம், பொறாமை, பேராசை போன்றவை அழிந்து நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.
- சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
- சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்!
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது:-
* சாலையில் பூசணிக்காயை உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
* சாலை பாதுகாப்புக்காக சாலையில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம்.
* அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
* சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று தெரிவித்துள்ளது.
- அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
- தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.
அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
- 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை (30-ந் தேதி) சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.
அதேபோல 5-ந்தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது.
இந்த ரெயில் மயிலாடு துறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
- நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
- மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
சென்னை:
சென்னையில் இருந்து ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஆயுதபூஜை வரும் அக்டோபர் 1-ந்தேதியும், தீபாவளி அக்டோபர் 20-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்கு செல்பவர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தனர்.
பஸ்களை விட ரெயில்களில் ஏராளமானோர் பயணிப்பதால், ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும் எனவும், விரைவில் அதற்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வழங்க வேண்டும் எனவும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாகர்கோவில்-தாம்பரம், சென்னை சென்டிரல்- போத்தனூர், சென்டிரல்- செங்கோட்டை, எழும்பூர்-நெல்லை, எழும்பூர்-தூத்துக்குடி, நாகர்கோவில்-சென்டிரல் ஆகிய 6 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நாகா்கோவிலில் இருந்து வரும் 28, அக்டோபர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை தோறும்) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* நெல்லையில் இருந்து வரும் 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069), மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* தூத்துக்குடியில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06018), மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06017), அதேநாள் இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06054), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வரும் அக்டோபர் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06053), அதேநாள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06123), மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06124), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24, அக்டோபர் 1,8,15,22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06121), மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, அக்டோபர் 3,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06122), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான காலையில் இருந்து பயணிகள் காத்திருந்தனர்.
- ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
- புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.
இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.
புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
- சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை:
ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் 23ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
- தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி வருகிற 21, 22-ந்தேதி (சனி, ஞாயிறு) வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுத பூஜை, 24- ந்தேதி விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபபோல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 பஸ்கள் என கூடுதலாக 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படு த்தப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
- தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.
சென்னை:
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந்தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந்தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.
இதே போல வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.
இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந்தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
20-ந்தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை போல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந்தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.






