என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பேருந்துகள்"

    • தினசரி இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்.
    • இந்தாண்டு சென்னையிலிருந்து 11.35 லட்சம் பேர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வார்கள் என கணிப்பு

    ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்பொருட்டு தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில் பெருநகரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பொங்கலுக்கு சென்னையில் இருந்து 22,792 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தினசரி இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம். இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 9ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப ஜன.16 முதல் ஜன.19 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்தாண்டு சென்னையிலிருந்து 11.35 லட்சம் பேர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விரைவில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நவம்பர் 16 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்.
    • சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    கார்த்திகை மாதம் 1ஆம் தேதி அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. கார்த்திகை 1ஆம் தேதி சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வார்கள். மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள்.

    அவர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
    • சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    * தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர 10,529 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    * தீபாவளிக்கு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்படும்

    * 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    • தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வரும் 04.07.2025 முதல் 08.07.2025 வரையிலான நாட்களில், இவ்விழாவிற்கு, தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக வரும் 04.07.2025 மதியம் முதல் 08.07.2025 மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், இவ்விழாவினை முன்னிட்டு, திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம், நாகர்கோவில் சாலையில் தெப்பக்குளம், தூத்துக்குடி சாலையில் ITI வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து, திருச்செந்தூர் கோவில் வாசல்வரை செல்வதற்கு வசதியாக 30 கட்டணமில்லா சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் பங்கேற்க வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி சென்னை, திருச்சி, கும்பகோணம்., காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை., கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 06.07.2025, 07.07.2025 மற்றும் 08.07.2025 ஆகிய நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு https://www.tnstc.in/ மற்றும் TNSTC Mobile App மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் இருந்து 11ஆம் தேதி 1,156 பேருந்துகளும், 12ஆம் தேதி 966 பேருந்துகளும் இயக்கம்.
    • மாதாவரத்தில் இருந்து 2 நாட்களும் தலா 150 பேருந்துகளும் இயக்கப்படும்

    சித்ரா பவுர்ணமியை ஒட்டி வரும் 11, 12ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் இருந்து 11ஆம் தேதி 1,156 பேருந்துகளும், 12ஆம் தேதி 966 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து 2 நாட்களும் தலா 150 பேருந்துகளும் இயக்கப்படும்.

    மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 11ஆம் தேதி 1,940 பேருந்துகளும், 12ஆம் தேதி 1,530 பேருந்துகளும் இயக்கப்படும்

    SETC மூலம் 40 ஏசி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து 2 நாட்களும் இயக்கப்பட உள்ளன. இதற்கு TNSTC இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
    • பொங்கல் முடிந்து திரும்புவதற்காக மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும்.
    • அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும். சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறை இல்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டதோ அதே போல் பொங்கல் பண்டிகைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தீபாவளி பண்டிகையின் போது சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிக கட்டணம் வசூலித்த 4 தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டியின் போது உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க,செல்வராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார்,திருப்பூர் மாநகர தி.மு.க. தெற்கு செயலாளர் டி.கே.டி.நாகராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலுசாமி(கிழக்கு), அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நேற்று முதல் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 651 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நள்ளிரவு வரை 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணி வரையில் இயக்கப்பட்ட 2,686 பஸ்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    இதுதவிர ஆம்னி பஸ்களில் 20 ஆயிரம் பேரும் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரெயில்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று வெளியூர் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் 1,855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களையும் சேர்த்து மொத்தம் 4000 பஸ்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.

    அரசு பஸ்கள் மூலம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இன்று பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன.

    இதனால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து பெரும்பாலானவர்கள் இன்று இரவு வெளியூர் பயணத்தை மேற்கொள்வதால் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரித்தது. பகல் நேர பயணத்தை மேற்கொண்டனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    நேற்று ஒரேநாளில் 1½ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது இன்று 2 லட்சத்தை தாண்டும். வழக்கமாக பொங்கல் பண்டிகை நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு காரணம் முன்பதிவில் அதிகளவில் அரசு பஸ்கள் சேர்க்கப்பட்டது தான். நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்.

    இன்று பயணம் செய்ய 45 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொது மக்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து பஸ்கள் இயக்கப்படும்.

    பிற போக்குவரத்து கழக பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்ட நிலையில் மேலும் தேவைப்பட்டால் சென்னை மாநகர பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை :

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 586 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பஸ்கள் இயக்கப்பட்டு 61 ஆயிரத்து 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களில் 1,544 பஸ்களும், 1,855 சிறப்புப் பஸ்களில் 904 பஸ்களும் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் (நேற்று இரவு 7 மணி நிலவரம்) சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 134 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    14-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக ரூ.10 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பஸ்களுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலைக்கு 4500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் வரை பவுர்ணமி தொடர்கிறது.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று முதல் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆயிரம் கூடுதல் பஸ்களை இயக்கவும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் வாயிலாக 1500 கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பஸ்களுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்தும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தருமபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கோயம்பேடு, தாம்பரம் பஸ் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து, வரும் 4, 5-ந் தேதிகளில், மெமு வகை குறுகிய தூர பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    வேலூரில் இருந்து வரும் 4, 5-ந் தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் அதே நாளில் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து வரும் 5, 6-ந் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் அதே நாளில் அதிகாலை 5.35 வேலூர் செல்லும். இந்த ரெயில்கள் வாணியம்பாடி, ஆரணி ரோடு, போளூர் வழியாக இயக்கப்படும்.

    விழுப்புரத்தில் இருந்து வரும் 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் காலை 11 மணிக்கு திருவண்ணா மலைக்கு செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து வரும் 5-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

    விழுப்புரத்தில் இருந்து வரும் 4, 5-ந் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து வரும் 5, 6-ந் தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் காலை 5 மணிக்கு விழுப்புரம் செல்லும்.

    • எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக ‘ஸ்பேர்’ பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடம் திறப்பதாக இருந்தது.

    ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7-ந்தேதிக்கு பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் சென்றவர்கள் பள்ளி திறப்பது தாமதம் ஆனதால் பயணத்தை தள்ளி வைத்தனர்.

    மேலும் ஒரு வாரம் கழித்து பள்ளிகள் திறப்பதால் வெளியூர் சென்றவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு வருவது தள்ளிப்போகிறது. 3-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    அதனால் அரசு போக்குவரத்து கழகத்திலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது.

    எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக 'ஸ்பேர்' பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள். திருமணம், உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிகம் நடப்பதால் வெளியூர் பயணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் எதிர்பாராமல் வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் வந்தால் திடீரென பஸ் வசதியை எவ்வாறு ஏற்படுத்தி கொடுக்க முடியும். வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்தால் அதனை கணக்கிட்டு தேவையான பஸ் வசதியை ஏற்படுத்தி தர முடியும்.

    விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் பெறப்பட்டு கூட்டத்தை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம். 7-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ×