என் மலர்
நீங்கள் தேடியது "கோடை வெயில்"
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, 10-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும்.
11-ந்தேதி ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-ந்தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
13-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகக்கூடும்.
- தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியம். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 5-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
- வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது. நேற்று வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 38 செல்சியஸ் (100.4 டிகிரி) வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி இன்று சென்னையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர். வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.
அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நாளை வரை சில பகுதிகளில் வெப்பநிலை 2முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வானிலை நிபுணர்கள் கூறும்போது, "வட-வட மேற்கு காற்று வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ஈரப்பதத்துடன் அது இன்னும் வெப்பமாக உணரக்கூடும். மாலையில் மட்டுமே கடல் காற்று வீசுகிறது. இது சிறிய அளவில் பயன் அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆனால் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்க இது போதுமானதாக இருக்காது. அடுத்த ஒரு வாரத்திற்கு உயர்ந்த வெப்பநிலை தொடர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.
- மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன.
- மண் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது.
கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா?
அப்படி குடிக்கிறபோது எந்தவித செயற்கை செயல்பாடும் இன்றி இயற்கையாக மண் பானையில் உள்ள நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறதா? வாருங்கள் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.
மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் இயற்கையான வடிவமைப்பு ஆகும். மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன. அதனால் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயல்முறையினால் பானையின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிறது. இது 'ஆவியாக்கக் குளிர்ச்சி' என அழைக்கப்படுகிறது.
மண்பானை ஒரு இயற்கை குளிரூட்டி. இது மின் சக்தி இல்லாமலே குளிர்ந்த தண்ணீரை வழங்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியமானது.
பிளாஸ்டிக் அல்லது உலோக பானைகளுடன் ஒப்பிடுகையில், மண் பானையில் தண்ணீர் எப்போதும் புதியதாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மண் பானையில் தண்ணீர் குடிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
- அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
- கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.
இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட மனோஜெயனை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜெயன் பரிதாபமாக இறந்தார்.
திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் அச்சுதன் கலைமணி (47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சந்தோஷ் (46), காய்கறி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள்.
சென்னை :
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.
மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.
கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது. இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும். அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
- வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன.
- மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. பகல் நேரங்களில் சூரியனின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க வீடு, அலுவலகங்களில் பெரும்பாலானோர் தஞ்சம் அடைகின்றனர். தவிர்க்கமுடியாத காரணத்துக்காக வெளியே வருபவர்களும் மரத்தின் நிழலிலும், மேம்பாலங்களின் கீழேயும், பஸ் நிறுத்தங்களிலும் என சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு பின்னர் செல்கின்றனர். வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன. இதில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு மக்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், 'கோடைகால வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது. இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. மத்திய அரசு இப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது.
- உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால்
மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது.
பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுப்பது எப்படி என்று தெரியாமல் பலர் சருமத்தை பளபளக்க வைக்க பல வகையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ் மாஸ்க், கிரீம், ஸ்க்ரப், ஃபேஸ் வாஷ் போன்றவை. பளபளப்பான சருமத்தைப் பெற பெண்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள், அவர்களில் சிலர் மட்டுமே தெளிவாக சரியான தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் சருமத்தை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று அறியாதவர்களாக உள்ளனர். அவர்ளுக்கான பயனுள்ள பதிவுதான் இது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...
Facewash மூலம் முகத்தை கழுவவும்
முதலில் உங்களது சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து நம்பகமான பிராண்டைப் பயன்படுத்த தொடங்குங்கள். காலையில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாலையில் மாசு தொடர்பான அழுக்குகளை அகற்றவும் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவுவது நல்லது. அதிக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் தோல் வறண்டு போகலாம்.

Cleanser மூலம் சுத்தப்படுத்துதல்
தோல் பராமரிப்பு வழக்கத்தில் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவருடைய சருமத்தின் வகையைப் பொறுத்து நல்ல க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வந்த பிறகு அல்லது இரவில் தூங்கும் முன், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளென்சரைக் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, மேக்கப்பை அகற்றவும் உதவும்.
TONER முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தம் செய்த பிறகு Toner-ஐ பயன்படுத்துவது அவசியம். Toner சருமத்தில் ஆழமாக ஊடுருவி, க்ளென்சரால் தவறவிட்ட மேக்கப் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. கூடுதலாக, Toner சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற Toner என்னவென்று தெரியவில்லை என்றால் தோல் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் உங்களுக்கான பிராண்டை உபயோகிக்கலாம்.
முகத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்...
மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. எனவே, நீங்கள் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப்பிங் அல்லது முகத்தை சுத்தம் செய்யும் போதெல்லாம், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள தேன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலானவற்றையும் மாய்ஸ்சரைசர்களாகப் பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் அவசியம்
கோடை வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பகலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமே அவசியம் என்று சிலர் நம்பினாலும், மழை மற்றும் குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு தேவையானது தான். ஒரு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான SPF-ஐத் தீர்மானிக்க தோல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது.
நைட் கிரீம் பயன்படுத்துதல்
நைட் க்ரீம் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. மேக்கப்பை நீக்கிவிட்டு, இரவில் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திய பிறகு சருமம் வறண்டு போகும், எனவே நைட் க்ரீமைப் பயன்படுத்துவது சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.
நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற நைட் க்ரீமைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் அதைத் தடவுவது முக்கியம்.

தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, செல் மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நமது சருமத்தின் தோற்றம் மேம்படும். தண்ணீர் குடிப்பது உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும், இதனால் உங்கள் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
நாளை முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
நாளை முதல் 12-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:-
12 மற்றும் 13-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
- தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.
இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.






