என் மலர்
நீங்கள் தேடியது "வெப்ப அலை"
- காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று.
- இதனால் வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வாஷிங்டன்:
காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே காலநிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை ஐ.நா.சபை வலியுறுத்துகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, வட கரோலினாவில் 113 டிகிரி, வாஷிங்டன் டி.சி.யில் 109 டிகிரி என வெயில் கொளுத்துகிறது. இதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் திணறுகின்றனர். இதனால் சுமார் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 29-ம் தேதி வரை இந்த வெயில் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
- வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும்
இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், இது 2070 ஆம் ஆண்டுக்குள் 14-30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
பெரும்பாலும் நகர்ப்புற விரிவாக்கம், வெள்ள அபாயம் மற்றும் வெப்ப பாதிப்பு உள்ள பகுதிகளில் நடைபெறுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லி, சென்னை, சூரத், லக்னோ போன்ற நகரங்கள் அதிக வெப்ப அலை மற்றும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.
வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனவே இந்த அபாயங்களைத் தடுக்க, 2050க்குள் 2.4 டிரில்லியன் டாலரும், 2070க்குள் 10.9 டிரில்லியன் டாலரும் வீட்டு வசதி, போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்தியா GDPயில் 0.70% மட்டுமே நகர்ப்புற உள்கட்டமைப்பில் செலவிடுகிறது. இது மற்ற நாடுகளை விடக் குறைவாகும்.
- பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது.
- ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின.
பாரீஸ்:
ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது. ஸ்பெயினில் 106 டிகிரிவரை வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் ஸ்பெயின் அருகே லிஸ்பனில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரிவரை வெப்பம் பதிவானது.
வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகின்றன. நகரில் உள்ள பூங்காக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் பம்புகள், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இளைப்பாற அனுமதிக்கப்பட்டனர்.
ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின. தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட ஐரோப்பா ஏற்கனவே சுமார் 30 டிகிரி செல்சியல்வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்புரட்சி, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைவீச்சு உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பா நாடுகளில் 2,300 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
- கிராமப்புறங்களில் 15-29 வயதுக்குட்பட்ட ஆண்களின் வேலையின்மை சதவீதம் மே மாதத்தில் 14 சதவீதமாக இருந்தது.
- ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் 54.8 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த மாதம் 5.1 சதவீதமாக இருந்த வேலையின்மை சதவீதம் இந்த மாதம் 0.5 சதவீதம் அதிகரித்து 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் தெரிய வந்துள்ளது.
மே மாதத்திற்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மாதாந்திர தரவுகளின்படி கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே வேலையில்லா திண்டாட்டம் 5.2 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பெண்களில் 5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் 15-29 வயதுக்குட்பட்ட ஆண்களின் வேலையின்மை சதவீதம் மே மாதத்தில் 14 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்தை விட ஒரு சதவீதம் அதிக மாகும். இது பெண்களிடையே 10.7 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களிலும் 15-29 வயதுக்குட்பட்ட ஆண்களின் வேலையின்மை 15 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களிடையே 23.7 சதவீதத்திலிருந்து வேலையின்மை 24.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் 54.8 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை புதிதாக எடுக்கப்பட்ட இக்கணக்கெடுப்பானது ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் வேலையில் தொழிலாளர்களின் பங்கேற்பின் சதவீதத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததற்கு வடமாநிலங்களில் வீசிய வெப்பஅலை ஒரு முக்கிய காரணம் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கடும் வெயில் காரணமாக கட்டிடம் கட்டுதல் போன்ற வெளியில் செய்யும் வேலைகள் குறைந்ததால் வேலையின்மை சதவீதம் அதிகரித்துள்ளது. மாறி வரும் பருவநிலை இனி வரும் காலங்களில் வேலையின்மையில் பெரும் பங்கு வகிக்கும் எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் வடமாநிலங்களில் பயிர் அறுவடை காலம் முடிந்ததும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் விவசாயம் குறைந்து சேவைத் துறைகள் வளர்ந்து வருவதாலும், பெண்கள் சாதாரண தொழிலாளர்களாகவும், குறைவான ஊதியத்தில் வேலைகள் செய்வதாலும் வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
- பள்ளிகள் ஜூன் 15-ந்தேதி திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஜூன் 30 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- அதிக வெப்பநிலை காரணமாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச அரசு 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. பள்ளிகள் ஜூன் 15-ந்தேதி திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஜூன் 30 வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பிரயாக்ராஜில் உள்ள உத்தரபிரதேச அடிப்படை கல்வி கவுன்சிலின் செயலாளர் சுரேந்திர குமார் திவாரி, அனைத்து அடிப்படை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உ.பி. முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும்.
- கியாஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்கவேண்டாம்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான கோடை மழை பெய்து வருகிறது. அதேசமயத்தில் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் வருகிற 29-ந்தேதி முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை பகல் நேரங்களில் வெயில் 113 டிகிரி முதல் 131 டிகிரி வரை கொளுத்தும்.
எனவே அந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதாகவும், இதனை குறிப்பிட்டு மத்திய அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த தகவலில், வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும். வீடுகளில் காற்றோட்டத்துக்காக கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கவேண்டும். அதிக வெப்பத்தால் செல்போன்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பயன்பாட்டை குறைக்கவேண்டும். தயிர், மோர், பழச்சாறு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை அதிகம் பருகவேண்டும்.
கியாஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்கவேண்டாம். மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பி வைக்கவேண்டாம் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசும் என்பது தொடர்பாக பரவி வரும் இந்த தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''இதுபோன்ற தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
- பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள்.
சென்னை :
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.
மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.
கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது. இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும். அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதாவது 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி வரை இருக்கும். ஆந்திரபிரதேச கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தில் நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரையில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 101.1 டிகிரி கொளுத்தியது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினா விளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனி க்கோட்டை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, தானியமங்கலத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 15-ந்தேதி முதல் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் குஜராத்திலும் புதிய வெப்ப அலை வீசத் தொடங்கும்.
- மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது.
நேற்று அதிகபட்சமாக குஜராத்தில் 107 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறியதாவது:-
15-ந்தேதி முதல் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் குஜராத்திலும் புதிய வெப்ப அலை வீசத் தொடங்கும். நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை சில கடுமையான வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளது. குஜராத், பஞ்சாப், அரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை ஏற்படக் கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது.
- அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியாவில் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.
* இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 2040-ம் ஆண்டுவாக்கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.
* அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.
* மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
* போக்குவரத்தின்போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி) அளவுக்கு ஏற்படலாம்.
* தற்போதைய அளவுடன் ஒப்பிடுகையில் 2037-ம் ஆண்டுக்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது.
- இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.
இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் இந்த விபரங்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான வெப்பம் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் டெல்லியின் வெப்ப நிலை 114 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இது மிக அதிக வெப்பநிலை ஆகும்.
இதுபோல நாட்டின் பல முக்கிய நகரங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற வெப்பம் காரணமாக இந்தியாவில் பல ஆயிரம் பேர் பலியானதையும் விஞ்ஞானிகள் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தால் இவர்களின் உழைப்பு பாதிக்கப்படும். இது நாட்டின் தொழில் வளத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- உத்தர பிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெளிந்து போனது.
- இதைக்கண்ட ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.
லக்னோ:
வட இந்தியாவின் சில மாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் - பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரெயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரெயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.
இதனால் அந்த ரெயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அப்போது தண்டவாளங்கள் சீர்குலைந்து இருப்பது தெரியவந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரெயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப் லைனில் பிற ரெயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார்.
பைலட்டின் சாமர்த்தியத்தால் ரெயில் விபத்து தடுக்கப்பட்டதால், அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






