search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heat waves"

    • உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது.
    • இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்தியாவின் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் இந்த விபரங்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான வெப்பம் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் டெல்லியின் வெப்ப நிலை 114 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இது மிக அதிக வெப்பநிலை ஆகும்.

    இதுபோல நாட்டின் பல முக்கிய நகரங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற வெப்பம் காரணமாக இந்தியாவில் பல ஆயிரம் பேர் பலியானதையும் விஞ்ஞானிகள் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்தியாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்தியாவின் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தால் இவர்களின் உழைப்பு பாதிக்கப்படும். இது நாட்டின் தொழில் வளத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். #TelanganaHeadWave
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
    வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    நகரி:

    ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் அடுத்த 3 நாட்களுக்கு தற்போதுள்ள வெப்பத்தை விட அதிக வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.



    மேலும் 3 நாட்களுக்கு கடுமையான அனல் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ×