என் மலர்
நீங்கள் தேடியது "Telangana"
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள கோடட் நகரை சேர்ந்தவர்கள் ஒரு ஆட்டோவில் தம்மரா கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினர். அவர்களது ஆட்டோ கோடட் பகுதியில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் முன்னால் சென்ற ஒரு லாரியை வேகமாக முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். காயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்டு, தெலுங்குதேசம், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தெலுங்கானா மாநில பொறுப்பாளர் ஆர்.சி.குனிதா நிருபர்களிடம் கூறும்போது,
பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்து உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்குதேசம், கம்யூனிஸ்டு மற்றும் தெலுங்கான ஜன சமிதி ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார். தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். #Congress #LokSabha #Telangana

அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் அகாடமியில் படித்து வந்த சாத்வீகா ஷெரோன் (வயது 17), ஜாய் சுசித்ரா (14), ஆரோன் சுஹாஸ் (15) ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் ஆவர். அவர்கள், அங்கு டென்னிசி மாகாணத்தில் காலியர் வில்லே நகரத்தில் உள்ள டேனி என்பவருடைய வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்றிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் இந்த இட ஒதுக்கீடு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி அலுவலக அதிகாரி கூறியதாவது:-
மத்திய அரசின் அறிவிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #EWSReservation #Telangana
ஐதராபாத்:
பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் தொகுதியில் தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் எம்.பி.யாக இருக்கிறார். அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று சந்திரசேகரராவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட சர்சீலா நகரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசேகரராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தெலுங்கானாவில் எம்.பி.க்களாக இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகரில் மீண்டும் வேட்பாளராக வினோத்குமார் அறிவிக்கப்பட்டதும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினோத்குமாருக்கு டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. 43 சதவீதம் பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து தெலுங்கானாவில் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
சந்திரசேகரராவின் வேட்பாளர் அறிவிப்பு காரணமாக காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. #ChandrashekarRao
தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சிந்தனை சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
இவர்களில், 47 பேர், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். குற்ற வழக்குகளை சந்திப்பவர்களில் அதிகம்பேர் (50 பேர்) தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சட்டசபையில் இடம்பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சமாக இருந்தது.
ஆனால், நடப்பு சட்டசபையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, ரூ.15 கோடியே 71 லட்சமாக உள்ளது. காங்கிரசை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி ரூ.314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். #Telangana #MLA #CriminalRecord
