என் மலர்tooltip icon

    இந்தியா

    தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் உயிரிழப்பு - விரும்பியபடி கல்லறையிலேயே நல்லடக்கம்
    X

    தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் உயிரிழப்பு - விரும்பியபடி கல்லறையிலேயே நல்லடக்கம்

    • பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார்.
    • மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

    தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.

    இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார் .

    இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இந்திரய்யா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (ஜனவரி 11) காலமானார். அவரது இறுதி விருப்பப்படியே, தான் பார்த்து பார்த்துச் செதுக்கிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முன்னதாக தனக்குத் தானே கல்லறை கட்டியது குறித்து இந்திரய்யா ஊடகங்களிடம் பேசியவை அவர் இறந்த பின், மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    அதில் அவர், எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன்." என்று பேசியிருந்தார்.

    மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    Next Story
    ×