என் மலர்
நீங்கள் தேடியது "old man"
- புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது.
- ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ராம்பால் ராவத் என்ற 65 வயதான முதியவர் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதை அங்கிருந்த சுவாமி காந்த் என்பவர் பார்த்து ஆவேசமடைந்தார். அவர் ராம்பால் ராவத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரானது. இது ராம்பால் குடும்பத்திற்கு தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ராம்பாலின் பேரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிகாந்தை கைது செய்தனர்.
- லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார்.
- லாங், தனது துணைக்கு சியான்பா என்ற பூனையை வளர்த்து வருகிறார்.
சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது பூனையைப் பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.
இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் உள்ளது. தான் உயிரிழந்த பிறகு இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை தேடி வருகிறார்.
இந்நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
- 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
- இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
அப்போது அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்தான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார்.
- இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60).
இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார்.
இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த ரங்கசாமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.
- கார் மோதி முதியவர் பலியானார்.
- பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்த முதியவர் மாயமானர்
- இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.
ேசலம்:
சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வேணுகோபால் கடந்த 21-ந்தேதி 4 ரோடு பூக்கடை காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தம் அருகே வசித்து வரும் தன்னுடைய தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் உறவினர்கள், பல்வேறு இடங்களில் வேணுகோபாலை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.
- சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து போடிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் விசாரணை யில், மயங்கி கிடந்த முதியவர் தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 75) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார்.
- பிலஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வந்து சென்றனர்.
அதன்படி இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக முதியவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பண்ருட்டி கீழ்மாம்பட்டு சேர்ந்தவர் சிகாமணி (வயது 65) என தெரிய வந்தது. இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வந்துள்ளதாக கூறியதாகவும், தற்போது வீடு கட்ட தொடங்கிய பின் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக லஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதியவர் சிகாமணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர்:
வேப்பூர் அருகே ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 57), இவருக்கு மனைவி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வண்டிமேடு பகுதி தச்சன்குட்டையில் வசித்து வருபவர் அண்ணாதுரை (வயது 65). இன்று அதிகாலை வண்டிமேடு பழைய சிக்னல் அருகில் சாலை கடக்க விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேேய வயதானவர் உயிரிழந்தார்.
முயற்சி செய்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேேய வயதானவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
- ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81).
- இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81). இவர் நேற்று அவரது ஊரில் இருந்து ரெட்டியார்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, அய்யாதேவர் சென்ற மொபட்டின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அய்யாதேவர் சம்பவ இடத்திலலேயே இறந்தார்.
இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
- பாளை தெற்கு உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன்.
- நேற்று மருத்துவமனையில் உள்ள மின்சார அறை அருகே உள்ள தரை கீழ்தளத்தில் துர்நாற்றம் வீசி உள்ளது.
நெல்லை:
பாளை தெற்கு உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 82).
மாயம்
இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த அக்டோபர் 15-ந் தேதி பாளை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக உறவி னர்கள் சேர்த்துள்ளனர்.
மறுநாள் பாலசுப்பி ரமணியன் மருத்துவமனை வார்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலசுப்பிர மணியனை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் உள்ள மின்சார அறை அருகே உள்ள தரை கீழ்தளத்தில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது மாயமான பால சுப்பிர மணியன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பால சுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






