என் மலர்
சேலம்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
- ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி,
சேலம்:
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவா கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரி கரை, கே,பி.கரடு வடபுறம்,
மூலப் பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்ட முத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர்,
மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியா கவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராம கவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம் பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.
- அணைக்கு வினாடிக்கு 1232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 80.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.25 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 80.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1847 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.
- மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
- சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம், நவ.27-
சேலம் எருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சந்தானகுமார் (38). இவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் போதுமான வருமானமும் இன்றி தவித்து வந்தார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தானகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 84.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நீர்வரத்தை விட குறைவான அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கியது. அதன்படி இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 739 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 84.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 414 கனஅடியாக அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
- நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டிஜிபி நியமனம்
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்து முடிவு செய்யாதது ஏன்?
நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறுவது ஏன்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே டிஜிபி தேர்வு பட்டியலை தமிழக அரசு தயாரித்தது.
பட்டியலில் உள்ள 3 பேரும் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால்தான் திமுக அரசு தடுமாறுகிறது.
இன்னும் டிஜிபி நியமனம் செய்யப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஜிபி நியமனம் முறையாக நடைபெற்றது.
விவசாயிகள் பாதிப்பு
திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
கொள்முதல் செய்வதிலும் தாமதம் கொள்முதல் செய்த நெல்லை அனுப்புவதிலும் தாமதம். நெல்லை கொள்முதல் செய்யாததால்தான் மழையில் நனைந்து முளைத்து விட்டன.
நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை. மதுரை சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.
நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார். இப்போதும் நான் விவசாயிதான். முக ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதி.
முதலமைச்சர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார்.
நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை தெரிவிக்க வேண்டும்.
மத்திய வேளாண் சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?.
3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.
ஆளுங்கட்சி செய்வதை நாங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
விவசாயிகள் பாதிக்கப்படும் போது திமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
காவிரி நதிநீர் பிரச்சனையில் 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
- நெல்லை, தென்காசி, நாகை மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தென்காசி, நாகை மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தின் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை அறிந்து மற்ற பள்ளிகளுக்கும் விடுப்பு அளிக்கலாம் என்று திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க கோவில் நிர்வாகம் புனரமைத்தது.
இந்நிலையில், சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த முருகன் சிலை புனரமைக்கப்ட்டுள்ளது. சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ஆவான் பால் பாக்கெட்டில் "தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத்திருந்த கணக்கீட்டு படிவத்தினை தங்களது வாக்காளர் நிலை அலுவலரிடம் ஒப்படைத்து விட்டீர்களா" என்று வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
- மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது.
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக உள்ளது.
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி பேச வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தான் கோவை மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024ஆம் ஆண்டில் தான் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள்தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள்தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே?
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த உடன், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






