என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 100 டிகிரியை நெருங்கிய வெயில்- குளிர்பான கடைகளில் குவிந்த மக்கள்
    X

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 100 டிகிரியை நெருங்கிய வெயில்- குளிர்பான கடைகளில் குவிந்த மக்கள்

    • இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.
    • தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும், இளநீர் 30 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    சேலம்:

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்தது.

    நடப்பாண்டில் அதிகபட்சமாக நேற்று சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 99.7 டிகிரியாக பதிவானது. இதனால் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக மாலை 5 மணி வரை வெயிலின் உஷ்ணம் கடுமையாக நீடித்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

    அத்தியாவசிய தேவைகளுக்காக மதிய நேரங்களில் சாலைகளில் சென்றவர்கள் குடைகள் பிடித்த படியும் முகத்தை துணியால் மூடிய படியும் சென்றனர். சாலையில் சென்ற பொதுமக்கள் நிழலுக்கு ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி கடைகள், மோர், கம்மங்கூழ், நுங்குகள் மற்றும் செயற்கை குளிர்பானங்களையும் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் குளிர்பான கடைகளில்கூட்டம் அதிக அளவில் இருந்தது. தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும், இளநீர் 30 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    Next Story
    ×