என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    • மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இப்போதே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து உள்ளது. மேலும் இப்போது வெயிலின் தாக்கம் கோடைகாலத்துக்கு முன்னதாகவே அதிகரித்து வருகிறது.

    காலையிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலையோரம் உள்ள கடைகளில் இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை, கிர்ணி உள்ளிட்ட பழ ஜூஸ் ஆகியவற்றை வாங்கி குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

    இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் பழ ஜூஸ் கடைகள் அதிகளவில் முளைத்து இருப்பதையும் காணமுடிகிறது. மேலும் நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, கிர்ணி பழ சீசன் தொடங்கி உள்ளதால் பல இடங்களில் தர்பூசணி பழங்களை அதிகளவில் வியாபாரிகள் குவித்து வைத்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது தினசரி 250 டன் தர்பூசணி பழங்களும், 200டன் கரும் பச்சை நிறம் கொண்ட (கிரண் வகை) தர்பூசணி பழங்களும், 120டன் கிர்ணி பழங்களும் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிரண் வகை தர்பூசணி கிலோ ரூ.30 வரையிலும், கிர்ணி பழம் கிலோ ரூ.30 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தர்பூசணி வியாபாரி வடிவழகன் கூறும்போது, "கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் கோயம்பேடு சந்தைக்கு வரும் தர்பூசணி பழங்களின் வரத்து 2 மடங்காக அதிகரிக்கும். சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கிர்ணி பழங்கள் பூச்சிக் கொல்லிகளால் வீணாகி போனது. இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு கிர்ணி பழங்களின் விலை அதிகரித்து உள்ளது" என்றார்.

    • இரவில் அதிக அளவில் புழுக்கம் நிலவி வருவதால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
    • அடுத்த மாதம் 7-ந்தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இரவு நேரம் முதல் அதிகாலை வரை பனி அதிகமாக இருந்தது. இதனால் மின்சார தேவையும் குறைந்து இருந்தது.

    இந்நிலையில் சென்னையில் மதிய நேரங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்தது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

    வாகன ஓட்டிகள் வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்தனர். இதே போல் குழந்தைகள் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கோடை வெயில் போன்று வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. வீட்டில் மின்விசிறி ஓடினாலும் புழுக்கம் நிலவி வருகிறது.

    இரவில் அதிக அளவில் புழுக்கம் நிலவி வருவதால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். காலை தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் முதன் முதலாக நடப்பாண்டில் 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

    வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் கரும்பு பால், மோர், குளிர் பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மதியம் வெளியே செல்லும் பெண்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகத்தை துணியால் மூடி செல்கின்றனர். சிலர் குடைகளை பிடித்து செல்வதையும் காண முடிகிறது. கோடை வெயில் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த மாதம் 7-ந் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடலில் இருந்து வறண்ட காற்றும், வளிமண்டலத்தில் வறண்ட வானிலையும் நீடிப்பதனாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

    • இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.
    • மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும். தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரையில் நீடிக்கிறது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவையும் மழையில் நனைந் தது போல் ஆகிவிடுகின்றன.

    காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைத்துக் கொண்டும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டும் செல்லும் நிலை உள்ளது.

    இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, பனிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்து வெயில் காலம் தொடங்கும். இதற்கு அறிகுறியாகவே வெயில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என கூறி உள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் வெயில் பாதிப்பை விட பனி பாதிப்பே அதிக அளவில் உள்ளது.

    இரவு நேரத்தில் அதிக அளவில் கொட்டும் பனி காரணமாக வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோர் சளித் தொல்லையாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சுவாசப் பிரச்சனையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பனியின் தாக்கம் கூடுதல் பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் பொது மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை எடுப்பதற்கும் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.

    இந்தப் பனிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து கடுமையான வெயில் வாட்டி எடுக்க உள்ள சூழலில் தேர்தல் களமும் அப்போது சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
    • வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.

    இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.

    தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    • மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிலும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உயரும் என சொல்லப்பட்டது.

    அதன்படி, மதுரை விமான நிலையம் 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), மதுரை நகரம் 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), கடலூர் 100.93 டிகிரி (38.3 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), ஈரோடு 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) ஆகிய 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடல் காற்று நிலப்பகுதிக்குள் வராத காரணத்தினால் இந்த நிலை இருந்தது. ஆனால் நேற்று கடல் காற்று ஓரளவுக்கு வந்ததால், வெப்பம் சற்று குறைந்ததை உணர முடிந்தது.

    வருகிற 25-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும், அதன் பிறகு பகலில் வெப்பமும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.

    • மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள்.
    • சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தியது. மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள். இது தொடர்பாக வானிலை மையத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று சென்னையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை. ஆனாலும் மக்கள் உஷ்ணத்தை அதிகமாக உணர்வதற்கு காற்றில் ஈரப்பதம் மிகவும் குறைவாக உள்ளதுதான் காரணம் ஆகும்.

    இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

    வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது.
    • வெயில் திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன்.

    அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வசந்தபாலன், "தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன். சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டிவிட கூடாது என்று பா. ரஞ்சித் அவரது படங்களின் வாயிலாக நமக்கு கடத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.

    • சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவான நிலையில் பின்னர் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    இந்தநிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 101.1 டிகிரி வெயில் பதிவான நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 103.3 டிகிரி பதிவானது. இது நடப்பாண்டில் உச்ச பச்ச வெயில் பதிவாகும். இதனால் வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிக அளவில் இருந்தது. சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தொப்பி அணிந்த படியும், குடைகள் பிடித்த படியும் பொதுமக்கள் சாலைகளில் சென்றனர். மேலும் தாகத்தை தணிக்க இயற்கை மற்றும் செயற்கை குளிர்பான கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    • மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
    • இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி- – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். சில மாதமாக மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

    இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளில் ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, மேம்படு த்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஐ.ஆர்.20, ஏ.டி.டி.38, கோ– 51, பி.பி.டி.5204, ஆர்.என்.ஆர்.15048 ஆகிய நெல் ரகங்களில் விதை பண்ணைகள் அமைத்துள்ள னர்.

    விதை பண்ணையில் அதிக நீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வும், அதிக தழைச்சத்து அளிக்கக்கூடி உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தால் மஞ்சள் கரிப்பூட்டை நோய் பரவ சாதகமாக உள்ளது. இந்நோயால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து நெற்பழம் உருண்டைகளாக மாறிவிடும். இதனால் விதை உற்பத்தி பாதிக்கும். தானிய விற்பனையின்போது விலை இழப்பு ஏற்படும்.

    எனவே இந்நோயை கட்டுப்படுத்த நெல் பஞ்சுபுடை பருவத்தில் காப்பர் ைஹட்ராக்ைஸடு மருந்து ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் தெளிப்பதுடன் மகரந்த சேர்க்கை முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தெளித்து தரமான விதை உற்பத்தி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, உதவி விதைச்சான்று அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.

    திடீரென பகல் 12 மணியளவில் தஞ்சையில் மிதமான சாரல் மழை ெபய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

    ×